லண்டன் நகரில் வெடிகுண்டு மிரட்டல்…! அவசர அவசரமாக மக்கள் வெளியேற்றம்

151

லண்டன் நகரில் பிரசித்தி பெற்ற யூதர்களின் சமுதாய கூடத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்தை தொடர்ந்து அந்நாட்டு பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

லண்டனின் Huron மற்றும் Adelaide வீதிகளில் அமைந்துள்ளது யூதர்களின் பிரசித்தி பெற்ற சமுதாயக் கூடம். இங்கு யூதர்கள் வந்து செல்வது வழக்கம்.

அத்துடன், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறுவதுண்டு. இந்நிலையில், இன்று காலை 10.20 மணியளவில் இந்த கூடத்திற்கு வெடி குண்டு விடுக்கப்பட்டமையை தொடர்ந்து பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.

இதன் போது அங்கு இருந்தவர்களை பாதுகாப்பாக பொலிஸார் வெளியேற்றியிருந்தனர். அதன் பின்னர் பொலிஸார் கட்டிடங்கள் மற்றும் வெளிப்பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.

எனினும், அங்கு வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. எனினும், இது ஒரு வதந்தி என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் மீண்டும் அவர்களை சமுதாய கூடத்திற்குள் செல்லும் படி அனுமதித்துள்ளனர்.இருப்பினும் குறித்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, அண்மையில் கனடாவின் கியூபிக் நகரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மசூதியில் துப்பாக்கிய ஏந்திய நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இந்த தாக்குதலின் போது 6 பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக லண்டன் மாநகரம் சமுதாய கூடத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

SHARE