லண்டன் மரத்தான் போட்டியில் மரணமடைந்த ராணுவ வீரர்: குவியும் நிதி

272

பிரித்தானியாவில் நடைபெற்ற லண்டன் மரத்தான் போட்டியில் கலந்து கொண்ட ராணுவ அதிகாரி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவரது பெயரில் நிதி குவிந்துள்ளது.

டேவிட் சேத் என்ற 31 வயது ராணுவ அதிகாரியான இவர் லண்டன் மரத்தான் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

போட்டியின் எல்லைக் கோட்டை தாண்ட 3 மைல்கள் இருக்கும் நிலையில் திடீரென்று அவர் விழுந்து சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் லண்டன் மரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவரையும் கலங்கடிக்க செய்துள்ளது. இந்நிலையில் அவரது பெயரில் துவங்கப்பட்டுள்ள தொண்டு அமைப்பு சார்பில் ஏராளமான நிதி குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், ஒரு தொண்டு அமைப்புக்காக 200 பவுண்டுகள் நிதி திரட்டவே டேவிட் சேத் இந்த மரத்தான் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

ஆனால் எதிர்பாராத வகையில், மாரடைப்பு காரணமாக ராணுவ அதிகாரி டேவிட் சேத் மரணமடைந்ததால், இச்சம்பவத்தை கேள்வியுற்று பலரும் தங்களால் இயன்ற நிதியை அளித்து வருகின்றனர்.

இதனிடையே முதல் 4 மணி நேரத்திலேயே மரணமடைந்த ராணுவ அதிகாரியின் நற்செயலை பாராட்டும் வகையில் 40,000 பவுண்டுகள் வரை நிதி குவிந்துள்ளதாக கூறப்படுகிறது.

டேவிட் சேத், பிரித்தானிய ராணுவம் சார்பில் ஆப்கானிஸ்தானில் சிறப்பாக செயல்பட்டு வந்த அதிகாரி என கூறப்படுகிறது. ராணுவ அதிகாரியாக 70 வயதில் சாதிக்கவேண்டியதை சேத் தமது 30 வயதில் சாதித்துள்ளதாக சக அதிகாரிகள் பெருமை பொங்க தெரிவித்துள்ளனர்.

SHARE