லண்டன் மாநகர சபைக்கு நெருக்கடி கட்டணங்கள் செலுத்த வேண்டிய நாடுகளில் இலங்கையும்

257

இலங்கை உட்பட்ட பல உயர்ஸ்தானிகரங்களும் தூதரகங்களும் லண்டன் மாநகர போக்குவரத்து (congestion charge) நெருக்கடி கட்டணங்களை செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் பிரித்தானியாவின் வெளியுறவு இராஜாங்க மற்றும் பொதுநலவாயத்துறை செயலாளர் பொரிஸ் ஜோன்ஸனால் வெளியிடப்பட்டுள்ளது.

2003ம் ஆண்டு போக்குவரத்து சேவைக்காக அப்போதைய லண்டன் மாநகர முதல்வர் Ken Livingstone இந்த கட்டணத்தை அறிமுகப்படுத்தினார்.

அன்று முதல் இது வரியாக இல்லாமல் கட்டணமாக அறிவிடப்பட்டு வருகிறது.

லண்டனில் காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை மணித்தியாலம் ஒன்றுக்கு 11.50 பவுண்ட்ஸ் என்ற அடிப்படையில் இந்த கட்டணம் அறவிடப்படுகிறது.

இதன்படி 2003முதல் லண்டன் மாநகர நிர்வாகத்துக்கு வாகன நெருக்கடி கட்டணமாக 9கோடியே 58 லட்சத்து 11 ஆயிரத்து 650 பவுண்ட்ஸ்களை அந்த நகரத்தில் அமைந்திருக்கும் சர்வதேச நிறுவனங்கள் செலுத்தவேண்டியுள்ளன.

இதில் இலங்கை, 2 லட்சத்து 63ஆயிரத்து 795 பவுண்ஸ்ட்களை செலுத்த வேண்டியுள்ளது.

எனினும் லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம், 1கோடியே 62 லட்சத்துக்கு 6ஆயிரத்து 970 பவுண்ட்ஸ்களை செலுத்த வேண்டியுள்ளது.

ஜப்பானிய தூதரகம், 7 லட்சத்துக்கு 72ஆயிரத்து 20 பவுண்ட்ஸ்களையும், ரஸ்ய தூதரகம் 5 லட்சத்துக்கு 485ஆயிரத்து 360 பவுண்ட்ஸ்களையும் செலுத்த வேண்டியுள்ளன

இந்திய உயர்ஸ்தானிகரகம் 4 லட்சத்து 489ஆயிரத்து 825 பவுண்ஸ்ட்களை செலுத்த வேண்டியுள்ளது.

SHARE