இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் நேற்று திடீரேன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து பேசியுள்ளார். அவரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்துள்ளார். மனு கொடுத்துவிட்டு வெளியில் வந்தநடிகர் பார்த்திபன் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்தபோது, அண்மையில் லதா ரஜினிகாந்த் எனக்கு போன் செய்து அழுதபடி பேசினார்.
குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக இன்று காலையில் பத்திரிக்கையில் வந்த செய்தியை படித்தேன். ஒரு பெண், ஆண் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். இதுபோல் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு, நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்று அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார்.
அதன் அடிப்படையில் தற்போது போலீஸ் கமிஷனரை சந்தித்து இதுபோல் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.