லாகூரில் தற்கொலைப்படை தாக்குதல்

186

பாகிஸ்தான் தலைநகர் லாகூரில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, 30 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

பஞ்சாப் மாநில முதல்வர் ஷெபாஷ் ஷெரீப்பின் வீட்டிற்கு அருகே இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் ஜின்னா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பிரதேசத்தில் பணியில் அமர்த்தப்பப்பட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்தே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

லாகூரில் இவ்வருடத்தில் நடத்தப்பட்ட மூன்றாவது மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். கடந்த பெப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேரும் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE