லாட்டரியில் 12-மில்லியன் டொலர்கள் வென்றவர் விருப்பம் என்ன தெரியுமா?

287

 

ஒன்ராறியோ மனிதன் ஒருவர் தனது 12-மில்லியன் டொலர்கள்லாட்டரி பரிசு பணத்தின் ஒரு பகுதியாக 11-வருடங்களாக காணாமல் இருந்த தனது தாயாருடன் மீண்டும் சேரப்போவதாக தெரிவித்துள்ளார்.

ஷிபா ஷிபா என்பவர் வூட் பிறிட்ஜ், ஒன்ராறியோவில் வசிப்பவர். கடந்த 11-வருடங்களாக தூரம், ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் நிதிபற்றாக்குறை போன்ற அசௌகரியங்கள் காரணமாக லெபனானில் வசிக்கும் தனது தாயை காண முடியவில்லை.

ஈராக்கை சேர்ந்த ஷிபா 6/49 ஜக்பொட் வெற்றியின் ஒரு பகுதியை தனது தாயை ஒரு தடவை பார்க்க பயன்படுத்த போவதாக நிருபர்களிடம் தெரிவித்தார். தனது விருப்ப பட்டியலில் தாயை பார்ப்பதே முதலிடம் பெறுகின்றதென கூறினார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் மேலும் தெரிவிக்கையில் இந்த வெற்றி தனது தாயாரை பார்க்கும் சந்தர்ப்பத்தை மட்டும் தரவில்லை ஜோர்டான் மற்றும் ஈராக்கிலிருக்கும் தனது உறவினர்களையும் சந்திக்க ஒரு சந்தர்ப்பத்தை தந்துள்ளதென கூறினார்.

இவை மட்டுமன்றி புதிதாக திருமணம் செய்த தனது மகள் மற்றும் அவரது கணவர் இருவருக்கும் அவர்களது முதல் வீட்டை வாங்கவும் உதவி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். தனது மகன் முடி திருத்தும் கடை திறக்கவும் தனது மகளின் கல்விக்கும் செலவழிக்க போவதாகவும் கூறுகின்றார்.

SHARE