லாட்டரி சீட்டை மகளுக்கு பரிசளித்த தந்தை

273

அமெரிக்காவை சேர்ந்த தந்தை லாட்டரி சீட்டை வாங்கி தனது மகளுக்கு பரிசாக கொடுத்த நிலையில் குறித்த சீட்டுக்கு $2 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

நியூ ஜெர்சியை சேர்ந்த மெலிசா ஸ்பெக்னோலாவுக்கு அவரின் தந்தை லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி பரிசாக அளித்தார்.

அந்த சீட்டுக்கு $2 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. இதனால் மெலிசா மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளார்.

இது குறித்து மெலிசா கூறுகையில், இதுவரை எனக்கு லாட்டரியில் பரிசு விழுந்ததில்லை. இது தான் முதல்முறை.

இந்த பணத்தின் ஒரு பகுதியை வைத்து Bahamas நாட்டுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளேன்.

மீதி பணத்தை என் தனிப்பட்ட விடயங்களுக்காக செலவிடவுள்ளேன் என கூறியுள்ளார்.

SHARE