லிங்கா படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்த வேந்தர் மூவிஸ் எஸ். மதன் தயாரிக்க இருக்கும் புதிய படத்தை எழுதி, இயக்கி, நடிக்கும் வாய்ப்பு ராகவா லாரன்ஸிற்கு கிடைத்திருக்கிறது.
காஞ்சனா 2 பிறகு, காஞ்சனா 3 படத்திற்கான வேலையை லாரன்ஸ் தொடங்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய படத்திற்கான வேலைகளில் களம் இறங்குகிறார்.
கமர்ஷியல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவிருக்கும் இப்படத்திற்கான மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் தேர்வு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.