லியோ படத்தின் இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா.. புதிய சாதனை படைத்த விஜய்

100

 

தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தை லலித் குமார் தயாரித்திருந்தார்.

உலகளவில் வெளிவந்த இப்படம் சில கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் கூட மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

முதல் நாளே உலகளவில் ரூ. 148 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்தது.

பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில் லியோ படம் வெளிவந்து 11 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 510 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம் லியோ தான் ரூ. 500 கோடி வசூல் செய்த முதல் தளபதி விஜய்யின் படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

SHARE