தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த விஜய்யின் லியோ படத்தின் முதல் நாள் முதல் காட்சி ஒளிபரப்பாகி விட்டது. படத்தை பார்த்த ரசிகர்கள் இதுவரைக்கும் எந்த ஒரு நெகட்டீவ் விமர்சனம் கொடுக்கவில்லை.
மற்ற மாநிலங்களில் படம் ஏற்கெனவே வெளியாகிவிட்ட நிலையில் தமிழகத்தில் முதல் ஷோவே 9 மணிக்கு தான் தொடங்கியது.
வழக்கம் போல் ரசிகர்கள் படத்தை படு மாஸாக கொண்டாடி வருகிறார்கள்.
நிச்சயதார்த்த ஜோடி
இந்த நிலையில் விஜய்யின் லியோ படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் போது ஒரு ஜோடி திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.