இன்னும் சில நாட்களில் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் நாள் வரவிருக்கிறது. ஆம், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ வருகிற 19ம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது.
இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படத்திற்கும் இருந்ததே இல்லை என்ற அளவிற்கு டிக்கெட்ஸ் விற்பனை ஆகி வருகிறது. இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே லியோ படம் உலகளவில் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
மேலும் இப்படம் உலகளவில் ரூ. 487 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லியோ படத்தின் பட்ஜெட் ரூ. 300 கோடி என்பதினால், ரிலீஸுக்கு முன்பே ரூ. 187 கோடி வரை தயாரிப்பாளருக்கு லாபம் கிடைத்துவிட்டதாக கூறுகின்றனர்.
விஜய் சம்பளம்
இந்நிலையில், வசூலில் ரிலீஸுக்கு முன்பே சாதனை செய்து வரும் லியோ திரைப்படத்தில் நடிக்க நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, லியோ படத்தில் நடிக்க நடிகர் விஜய் ரூ. 125 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். மேலும் லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் நடிக்க நடிகர் விஜய் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.