லியோ படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய மனோஜ் பரமஹம்சா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

108

 

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

சில கடுமையான விமர்சனங்கள் படத்தின் மீது இருந்தாலும் கூட வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை உலகளவில் ரூ. 580 கோடிக்கும் மேல் வசூல் செய்து விஜய்யின் கெரியரில் புதிய சாதனையை படைத்துள்ளது.

மேலும் தமிழகத்தில் ரூ. 100 கோடிக்கும் மேல் ஷேர் கொடுத்துள்ளது. வெளிநாடுகளில் மட்டுமே இதுவரை ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என பல வசூல் சாதனைகளை லியோ தொடர்ந்து செய்து வருகிறது.

மனோஜ் பரமஹம்சா சம்பளம்
இப்படத்திற்கு பிரபல முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான மனோஜ் பரமஹம்சா தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் விண்ணைத்தாண்டி வருவாரா, நண்பன், பீஸ்ட், பூவரசம் பீப்பீ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா லியோ படத்தில் பணிபுரிய ரூ. 2 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE