பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமல் குத்தகை வாகனங்களை லீசிங் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முடியாதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான சுற்றறிக்கை 4 நாட்களில் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திற்கும் அனுப்பப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குத்தகை வாகனங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி, குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தினர் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக ஒன்று திரண்டு மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லீசிங் நிறுவனங்கள்
குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் அசங்க பொத்துப்பிட்டிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாத குத்தகை வாகனங்களை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்க மாட்டோம் என பொலிஸார் உறுதியளித்தார் என குறிப்பிட்டுள்ளார்.