அட்டன் லெதண்டி தோட்டம் பங்களா டிவிசன் பகுதியில் பாவனைக்குதவாத நிலையில் கானப்பட்ட பாதை புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 07.05.2016 மாலை நடைபெற்றது
சுமார் 100 வருடங்களாக வாகன போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலையில் 30 குடும்பங்கள் பயன்படுத்திய ஒற்றையடி பாதையாக கானப்பட்ட மேற்படி பாதை மலையக புதிய கிராமங்கள் உட்காட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் அமைச்சர் திகாம்பரம் அவர்களின் ஆலோசனைக்கமைய 5 லட்சம் ரூபாய் செலவில் செப்பனிடப்படவுள்ளது
மேற்படி பாதைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் நோட்டன் பிரதேச தொழிலாளர் தேசியசங்கத்தின் அமைப்பாளர் நந்தகோபால் உட்பட பொதுமக்கள் என. பலரும் கலந்துகொண்டனர்.