கண்டியிலிருந்து பொகவந்தலாவை நோக்கி பயணித்த லொறியொன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அட்டன் பொகவந்தலாவ பிரதான விதியின் நோர்வூட் கிளங்கன் பகுதியிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
கண்டியில் இருந்து பொகவந்தலாவ சென்ஜோன் டிலரி பகுதிக்கு விற்பனை செய்வதற்காக கோழிகளை ஏற்றி வந்த லொறியொன்றே வேகக் கட்டுபாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த லொறிவண்டியில் இரண்டு பேர் பயணித்ததாகவும் சம்பவத்தில் சாரதி மாத்திரம் படுகாயங்களுக்குள்ளான நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.