நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து கொழும்பு – மீகொட பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் கூறியுள்ளார்.
மேலும், நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்தே லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொறியில் சாரதியும் உதவியாளரும் பயணித்துள்ளதாகவும் இந்த விபத்து ஏற்பட சாரதியின் கவனயீனமே காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, லொறியில் இருந்த 5 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்கறி வகைகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சில மரக்கறி வகைகள் சேதமாகியுள்ளதாகவும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருதாகவும் போக்குவரத்து பொலிஸார் கூறியுள்ளார்.