வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றைய தினம் நிதி மோசடி விசாரணைப் பிரிவில்முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அமெரிக்கா லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் வீட்டை வாடகைக்கு கொள்வனவு செய்துள்ள நபர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்குமாறு அமைச்சர் முறைப்பாடு செய்துள்ளார்.
மஹிந்த ஆட்சி காலத்தில் குறித்த வீட்டில் முக்கிய பிரமுகர் ஒருவரின் மகனே அங்கு இருந்துள்ளார் என அமைச்சர் பல ஆவணங்களையும் கோப்புக்களையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரிடம் சமர்ப்பித்துள்ளார்.
மேலும், முக்கியஸ்தரின் மகனது பாதுகாப்புக்காக இரண்டு படையினர் பயன்படுத்தப்பட்டிருந்ததாகவும், குறித்த வீட்டுக்கான மின்சார கட்டணம் தொலைக்காட்சி கட்டணங்களும் வௌிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ன எனவும் மங்கள முறைப்பாடு செய்துள்ளார்.