உடையார் கட்டு வடக்கு பிரதேசத்தில் 35 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட முதியோர் ஓய்வகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
குறித்த திறப்பு விழா நிகழ்வானது இன்று (06.02.2024) இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் முதியோர் ஓய்வகத்தை திரைநீக்கம் செய்து வைத்துள்ளார்.
தேசிய செயலக நிதி அனுசரணை
முதியோருக்கான தேசிய செயலக நிதி அனுசரணையில் மாவட்ட செயலம் ஊடாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலத்தின் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் முதியோர் ஓய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
உடையார் கட்டு வடக்கு கிராமஅபிவிருத்தி சங்க தலைவர் பாலகிருஸ்னன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்தன்,புதுக்குடியிருப் பிரதேச சமூக சேவைகள் உத்தியோகத்தர் ச.சதாகரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்,கிராம மட்ட அமைப்புக்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.