வங்கதேசத்தில் அசத்திய இலங்கை வீரர் உபுல் தரங்கா

295

 625.117.560.350.160.300.053.800.210.160.70 (1)

வங்கதேசத்தில் டாக்கா பிரிமியர் டிவிசன் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடந்து வருகிறது.

இதில் நேற்று முன் தினம் நடந்த ஒருநாள் போட்டியில் மொகமதீன் ஸ்போட்டிங் கிளப்- பிரதர்ஸ் யூனியன் அணிகள் மோதின.

முதலில் ஆடிய மொகமதீன் ஸ்போட்டிங் கிளப் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு285 ஓட்டங்கள் எடுத்தது. உபுல் தரங்கா, நஸ்முல் ஹொசன் மில்லன் தலா 70 ஓட்டங்களும், அணித்தலைவர் முஸ்தபிஜூர் ரஹீம் 72 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் 286 ஓட்டங்களை இலக்கை கொண்டு களமிறங்கிய பிரதர்ஸ் யூனியன் அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ஓட்டங்களே எடுத்தது. இதனால் மொகமதீன்ஸ் போட்டிங் கிளப் 78 ஓட்டங்களால் வென்றது.

அதிகபட்சமாக ஜாகீர் ஹசன் 61 ஓட்டங்களை எடுத்தார். மொகமதீன் ஸ்போட்டிங் கிளப் சார்பில், சுபாஸிஸ் ரோய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

SHARE