வங்காளதேசத்திற்கு யாபா என்ற போதை மாத்திரைகளை கடத்திவந்த ரோஹிங்யாக்களை அந்நாட்டு போலீசார் கைது செய்து உள்ளனர்.

235

மியான்மரின் ரக்கினேவில் ராணுவ நடவடிக்கை மற்றும் கலவரத்தால் ரோஹிங்யா இன மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அங்கிருந்து உயிர்தப்பிக்க சுமார் 5 லட்சம் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்து உள்ளனர். ரோஹிங்யா அகதிகளுடன் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் வங்காளதேசத்திற்கு யாபா என்ற போதை மாத்திரைகளை கடத்திவந்த ரோஹிங்யாக்களை அந்நாட்டு போலீசார் கைது செய்து உள்ளனர். மூன்று ரோஹிங்யாக்கள் மற்றும் ஒரு வங்காளதேச நாட்டவர் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாட்டை பிரிக்கும் நாப் ஆற்றில் படகில் சென்றவர்களை வங்காளதேச சிறப்பு படை போலீஸ் இடைமறித்து விசாரித்த போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

படகில் இருந்து 8 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த வாரமும் 430,000 போதை மாத்திரைகளை கடத்தியதாக இரு ரோஹிங்யா வாலிபர்களை போலீஸ் கைது செய்தது.

SHARE