ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆன நிலையில் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. 600 கோடிக்கும் அதிகமான வசூல் குவிந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் நடிகர் ரஜினி, இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு பல கோடி மதிப்புள்ள சொகுசு கார் பரிசளித்தது.
மேலும் தற்போது ஓடிடியில் படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
மலேசியாவில் சாதனை
இந்நிலையில் மலேசியாவில் ஜெயிலர் படத்தை ரிலீஸ் செய்த ஐங்கரன் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
ஜெயிலர் படம் மலேசியாவில் இதற்கு முன் வந்த எல்லா இந்திய படங்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டதாக தெரிவித்து இருக்கின்றனர்.
இதற்கு முன் ஷாருக் கானின் தில்வாலே படம் 5.5 மில்லியன் மலேசிய ரிங்கிட் வசூலித்து முதலிடத்தில் இருந்தது. அதை ஜெயிலர் படம் முறியடித்து இருக்கிறது.