வசூல் ராஜா அமைச்சர் ரிசாட் வசமாக மாட்டினார்!
மன்னாரில் தமிழர்களின் 3,500 ஏக்கர் காணிகளை பிடித்து கள்ள உறுதி செய்து
கொள்ளையடித்தவர், தமிழர்களுக்கு அபிவிருத்திக்கு என்று சொல்லி பல மில்லியன் கோடியை சூறையாடிய சூறாவளி இன்று அடங்கி விட்டது!
யானை அடிக்குமுன் தானே அடித்து மாட்டிக்கொண்ட அமைச்சர் ரிசாட்..
பாரிய நிதி மோசடி ஊழல் வழக்கில் சிக்கி தவிக்கும் அமைச்சர் ரிசாட் தான் ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை மறைக்கும் முகமாக 2500 பேருக்கு தலா இரண்டு லட்சம் அடிப்படையில் கடன் வழங்க திட்டமிட்டிருந்தார்.
அதற்காக ஆவணங்களை தயார் செய்து பணத்தை கடன் அடிப்படையில் இரகசியமாக வழங்க இருந்த நேரம் பாரிய லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது..
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சர் ரிசாட் பணத்தை மாதாந்த கடன் அடிப்படையில் வழங்க இருந்தார்..
கடன் வாங்குவோர் மாதாந்தம் 2000 ரூபா மீள சொலுத்த வேண்டும் என்றும்..
நூறு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் வட்டி என்ற அடிப்படையில் இந்த பணங்கள் வழங்குவதற்கு ஏற்பாடாகி இருந்தது..
இதை அறிந்த பாரிய லஞ்ச ஊழல் ஆணைக்கு உடன் வன்னிக்கு விஜயம் செய்து தடுத்து நிறுத்தியதோடு சில ஆவணங்களையும் கைப்பற்றீ உள்ளது..
எப்படியாவது தன்னிடம் உள்ள சட்டவிரோத பணத்தை மறைக்கப்போய் தானாகவே மாட்டிக்கொண்டார் அமைச்சர் ரிசாட்..
எந்தவொரு வங்கியின் துணையில்லாமல் இவ்வளவு பெரிய பணத்தை எப்படி அமைச்சர் ரிசாட் வழங்க முன் வந்தார் ??
இந்த பணங்கள் எவ்வாறு கிடைத்தது ??
தான் வீதிக்கு சென்றால் கூட ஊடகத்தில் வெளிப்படுத்தும் அமைச்சர் ரிசாட் இந்தளவு பாரிய வேலைதிட்டம் செய்யும் போது ஏன் ஊடகங்களுக்கு அறிவிக்கவில்லை ??
இவ்வாறு எடுத்த முயற்சி நடைபெறாமல் போனது ஏன் ??
என்ற கேள்வி பலபேர் மத்தியில் எழுந்துள்ளது..
அமைச்சரின் இந்த செயற்பாட்டோடு பாரிய லஞ்ச ஊழல் ஆணைக்குழு அமைச்சர் ரிசாட் மீதான குற்றத்தை உறுதி செய்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாரிய லஞ்சம் ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது..
தன்னை பாதுகாக்க எடுத்த முயற்சி தன்னையே காட்டி கொடுத்துவிட்டது என்ற மன வேதனையில் உள்ளார் அமைச்சர் ரிசாட்..
அத்தோடு அமைச்சர் ரிசாட்டின் இந்த அதிரடி நடவடிக்கையை காட்டி கொடுத்தவர் ரிசாட் அமைச்சரின் கட்சியை சேர்ந்த பிரதேச சபை தவிசாளராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிட தக்கது..