வடகிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழ் பேச இரண்டு சமூகங்களும் சமத்துவத்தின் அடிப்படையில் வாழவேண்டும்: கலையரசன்

272
இந்த நாட்டிலே நடைபெற்ற ஜனநாயகரீதியான போராட்டங்களாக இருக்கலாம், ஆயுதரீதியான போராட்டங்களாக இருக்கலாம் இவை அனைத்தும் நடைபெற்றது வடகிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழ் பேசும் இரண்டு சமூகங்களும் சமத்துவத்தின் அடிப்படையில் வாழவேண்டும் என்பதற்காகவே என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டியானது நேற்று  கல்லூரி முதல்வர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்.

வடகிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் இந்த நாட்டிலே சிறுபான்மை இனங்களாக வாழ்ந்த இரண்டு சமூகங்களும் இணைந்து அரசியல் ரீதியான எந்த முன்னெடுப்புக்களையும் எடுக்க முடியாதா நிலை கடந்த காலத்தில் ஏற்பட்டிருந்தது.

ஆனால் அது தற்போது மாற்றமடைந்து இரண்டு இனங்களும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து தீர்வுகளை பெறுகின்ற சூழ்நிலை தோன்றியிருக்கின்றது அதனை பயன்படுத்தி மக்களை ஒன்று சேர்த்துக்  கொண்டு செல்ல வேண்டியது எமது ஒவ்வொருவருடைய பொறுப்பாகும்.

இந்த நாடு 1948 ஆம் ஆண்டு அன்னியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றிருந்தாலும் 1949ஆம் ஆண்டே இந்த நாட்டில் ஒற்றையாட்சியின கீழ் தீர்வு என்பதன் அடிப்படையிலே அரசியல் சீர்திருத்தச்சட்டம் திருத்தப்பட்டது.

1949 ஆம் ஆண்டு இந்திய தமிழர்களுக்குரிய பிரஜாவுரிமை மறுக்கப்பட்டபோது கிளர்ந்தெழுந்த எமது தமிழ் இனம் உடனடியாகவே இலங்கைத்  தமிழரசுக்கட்சியை உருவாக்கியது இதனை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர்கள் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த கட்சிகளே அன்றிருந்து இன்று வரைக்கும் தமிழ் பேசும் இரண்டு சமூகங்களும் சமத்துவமான முறையில் வாழவேண்டும் என்பதில் அக்கறையாக இருந்து செயற்பட்டு வந்திருக்கின்றது.

வடகிழக்கு பிரதேசங்களில் வாழ்கின்ற தமிழ்ப்பேசும் இரண்டு சமூகங்களும் அவரவரது கலை, கலாச்சாரங்களை பின்பற்றி சகல அரசியல் அந்தஸ்த்தையும் கொண்ட சமஸ்டி அடிப்படையிலான தீர்வினை வலியுறுத்தியே குரல் கொடுத்து வந்திருக்கின்றது.

அதற்கான சில மாற்றங்கள் தற்போது ஏற்பட்டிருக்கின்றது என்பதனை நாம் கண்கூடாக காணமுடிகின்றது.

சர்வதேச சாசனங்களின் படி இன்று இந்த நாட்டிலே ஒரு குழாமாக வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ பேசும் இனம் சகல அந்தஸ்த்ததையும் கொண்டதும் தாங்களை தாங்களே ஆளக்கூடிய இனமாக வாழவேண்டும் என்பதே எமது நோக்காகும்.

அதனடிப்படையிலேதான் வடகிழக்கு பிரதேசங்களில் தமிழப்பேசும் இனம் ஒன்று பட்டு சமஸ்டி அடிப்படையிலான தீர்வினை வலியுறுத்தி நிற்கின்றோம்.

தற்போது அரசியல் மறுசீரமைப்பு என்ற கோணத்தில் பல இடங்களில் மக்கள் மத்தியில் கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றது இந்தக்கருத்தாடல்களில் சிலர் வடகிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள் அவ்வாரான செயற்பாடுகள் தொடர்ந்து நீடிக்குமானால் எங்களுடைய தமிழ்ப்பிரதேசங்கள் பெரும்பான்மை இனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு பறிபோகும் என்பதே உண்மையாகும்.

திருகோணமலையை பொறுத்தவரையில் 1827ஆம் ஆண்டு குடிசன மதிப்பீடு நடைபெற்றபோது மொத்தமாக பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த 11 குடும்பங்களே அங்கு இருந்ததாக அப்போதைய தகவல்கள் கூறுகின்றது இவ்வாறுதான் அவர்களது செயற்பாடுகள் அமைந்திருந்தது என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றது.

கல்முனை பிரதேசத்தினை பொறுத்தவரையில் தமிழ்மக்களை பொறுத்தவரையில் கடந்த காலங்களில் அபிவிருத்தி செயற்பாடுகள் உரிய முறையில் சென்றடையவில்லை என்பது அவர்களது ஆதங்கங்களாக இருந்து வருகின்றது அவ்வாரான செயற்பாடுகள் இனிமேல் ஏற்படாது என்பது எமது நம்பிக்கை காரணம் எமது பிரதி அமைச்சர் அதனை கருத்தில் கொண்டு செயற்படுவார் என்பதுடன் தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி கல்முனை பிராந்தியத்திலே சிறந்த தரைவராக அனைவராலும் பொற்றப்படவேண்டியவராக அவர் துலங்குவதற்கு தமிழ் மக்களின் முதல் தேவையாக இருக்கும் தமிழ் பிரதேச செயலகப்பிரிப்பில் அக்கறையோடு இருந்து தீர்வு காண்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

SHARE