வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமை, சமஷ்டி இல்லாத அரசியலமைப்பு சட்டத்தை தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும்

230

தமிழ் தேசம் அங்கீகரிக்கப்படாமல், வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாமல், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாமல், சமஷ்டி என்னும் சொல் இடம்பெறாமல் புதிய அரசியலமைப்புச் சட்டம் வருமானால் அதனை தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும் என தமிழ்தேசிய மக்க ள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

ஒற்றையாட்சி, சமஷ்டி என்னும் பெயர் பலகைகள், கோஷங்கள் தேவையில்லை என்ற கருத்தை சிலர் தமிழ் மக்கள் மத்தியில் விற்பனை செய்ய முயற்சிக்கின்றார்கள்.

ஆனால் 65 வருடங்களாக சிங்கள பௌத்த சிந்தனைக்குள் மூழ்கி கிடக்கும் இலங்கையின் நீதித்துறை மீண்டும் தமிழர்களை ஏமாற்றும் நிலை நிச்சயமாக உருவாக்கப்படும்.

ஒற்றையாட்சி மற்றும் சமஷ்டி போன்ற பெயர் பலகைகள், கோஷங்கள் தேவையற்றவை என்ற கருத்தை சிலர் தமிழ் மக்கள் மத்தியில் விற்பனை செய்ய நினைக்கிறார்கள்.

இலங்கையின் முதலாவது அரசியலமைப்பே ஒற்றையாட்சியையே சுட்டுகின்றது. அதற்கு வியாக்கியானம் செய்தது நீதி மன்றமே.

மேலும் இலங்கையை பொறுத்தமட்டில் ஒரு நாடு என்றவகையில் ஒற்றையாட்சி என்பதே நிலைப்பாடு. அதனையே 65 வருடங்களாக சிங்கள பௌத்த சிந்தனைக்குள் மூழ்கி கிடக்கும் இலங்கையின் நீதித்துறை தமிழ் மக்களை நிச்சயமாக ஏமாற்றும்.

மேலும் சமஷ்டி என்ற சொல் இல்லாவிட்டாலும் சமஷ்டியின் அம்சங்கள் இருக்கும் எனவும் சிலர் சொல்கிறார்கள்.

அது பொய் எனவே ஒற்றையாட்சி என்ற சொல் பயன்படுத்தப்படாமல் சமஷ்டி என்ற சொல் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும்.

இதற்கு உதாரணமாக 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும் எனவும் அதற்காக முதலில் கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் கூறப்பட்டது.

ஆனால் பின்னர் அவ்வாறான ஒன்று நடக்கவேயில்லை. அதற் கும் பின்னர் 18, 19 வருடங்களின் பின்னர் நீதிமன்றம் ஊடாகவே வடகிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டது.

எனவே நீதிமன்ற வியாக்கியானங்களை நாங்கள் நம்ப இயலாது. 65 வருடங்களுக்கு பின் நாம் மீண்டும் ஏமாற்றப்படலாம். அதற்கு நாம் இடமளிக்க கூடாது.

இதேபோல் சமஷ்டி என்றால் மாகாணங்களுக்க பகிரப்படும் அதிகாரத்தில் மத்தி தலையிட கூடாது என்பதும், மாகாணங்களுக்கு கொடுக்கப்படும் அதிகாரங்களை மீள பெற கூடாது என்பதும் அல்ல.

மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கப்பட்டு மத்தியில் கூட்டாட்சி அi மயவேண்டும். அதாவது மாகாணங்கள் இன அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தால்  அந்த மாநிலத்தின் கருத்துக்கள் மத்தியில் இடம்பெறவேண்டும். என்பதுடன் 2ம் நிலை சபை அல்லது செனட் சபை ஒன்று ம் ஆரம்பிக்கப்படவேண்டும்.

அதேவேளை செனட் சபை ஒன்று அல்லது 2 ஆம் நிலை சபை இருப்பதனால் அது சமஷ்டி ஆகவும் இயலாது.

உதாரணமாக சோல்பெரி அரசியலமைப்பில் செனட் அல்லது 2ம் நிலை சபை இருந்தது. ஆனால் அது ஒற்றையாட்சியை வலியுறு த்துகின்றது என்பதுடன் அது இனப்பிரச்சினைக்கு காரணமாகவும் அமைந்தது.

எனவே தமிழ்தேசம் அ ங்கீகரிக்கப்பட்டு, வடகிழக்கு இணைக்கப்பட்டு சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு சமஷ்டி என்ற சொல் குறிப்பிடப்படாத புதிய அரசியலமைப்பு சட்டம் வருமாக இருந்தால் அதனை தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

விக்கினேஸ்வரன் கேட்பது சமஷ்டி. வடகிழக்கு இணைப்பு.

“தமிழர்கள் ஒரு தேசிய இனம்” தேசிய இனம் முன்வைக்கின்றதை தேசிய ரீதியாக கணிக்கப்படவேண்டும். அதை இனவாதமென்றோ, பிரிவினைவாதமென்றோ அல்லது தனி நாட்டுக்கு இட்டுச்செல்வதென்றோ கூறுவது தவறான அரசியல் கண்ணோட்டமாகும்

14440976_2099647380261168_6062742789600464525_n

இலங்கையில் சமஷ்டியையும், வடகிழக்கு இணைப்பையும் கேட்டு நின்றவர்கள் சிங்களவர்களாகும். 1926 ஆம் ஆண்டு தொடக்கம் கேட்பவர்கள். கண்டிய சிங்களவர்கள் சோல்பரி அரசியல் அமைப்பு வரையும் கேட்டார்கள் அப்பொழுது ஒரு சிங்கள தலைவர்களும் அதனை ஒரு இனவாதமென்றோ அல்லது தனி நாட்டுக் கோரிக்கை என்றோ ஒருபோதும் கூறவில்லை.

ஒஸ்லோ பிரகடனத்தை புலிகளும் இராஜபக்ச அரசாங்கமும் ஏற்று கையெழுத்திட்டனர். அப்பிரகடனத்தின் பிரகாரம் வடகிழக்கு இணைப்பு சமஷ்டி அரசியல் உள்ளக சுயநிர்ணய உரிமை போன்றவைகள் வழங்கப்பட்டிருந்தன. அப்பொழுது தெற்கிலிருந்து இனவாதமென்றோ, தனிநாடென்றோ எவரும் குரலெழுப்பவில்லை.

எதிர்க் கட்சித் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் அடிக்கடி சமஷ்டி, வடகிழக்கு இணைப்பு என்பவற்றை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று உரைக்கின்றார்.

“ஒஸ்லோ பிரகடனத்தில் கையொப்பமிட்ட நிமல் சிறி டீ பால சில்வா அதை மறந்து இன்று ஓலமிடுகின்றார்”

இராஜதந்திர அணுகுமுறைப்படி பெறுவோம் என்றும் இரா சம்பந்தன் கூறுகின்றார். விக்கினேசுவரன் கூறுவது இனவாதமென்றால்,
தனி நாடென்றால் சம்பந்தன் கூறுவது எந்த வகையில் சேரும் என்பதை தெற்கின் தலைவர்கள் கூறாது மெளனம் காக்கின்றார்கள் ஏன்? ” அரசியல் நாடகமா? ”

வடகிழக்கு இணைப்பு சாத்தியமே!

wp-1466456638687.jpg

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது வடகிழக்கு இணைந்த மாகாணம் மாத்திரம்தான் என்ற நிலைக்கு கீழிறங்கி உள்ளது என்பது என் அவதானமாகும்.
அரசுக்கு (ஐக்கிய தேசியக் கட்சிக்கு)
வடகிழக்கை இணைத்து
வழங்குவதில் சில சிக்கல்கள் உள்ளன.

கூட்டு எதிரணி, சிங்கள மக்களின் உணர்வுகளை உலுக்கிவிட்டு அரசியல் இலாபமடையவும், இணக்க அரசை அசைத்து ஆட்டங்காணச் செய்யவும் முயற்சிக்கும்.

பௌத்த சிங்கள தீவிரவாதம் கடுமையான எதிர் நிலைப்பாடுகளை மேற்கொண்டால் நாட்டில் அமைதிக் குலைவு ஏற்படும்.

முஸ்லிம் மக்கள் தங்களுக்கு தீர்வு ஒன்று இல்லாமல் இணைவுக்கு சம்மதம் தெரிவிக்கமாட்டார்கள்.

அரசில் கூட்டாளியாக இருக்கும்
ஜாதிக ஹெல உறுமய ஆதரவளிக்கமாட்டாது.

அரசாங்கத்தின் பெரிய பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜனாதிபதி தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 40 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கிளை தடுமாறும், இவர்கள் இணைப்புக்குஆதரவாக நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெம்பான்மையை வழங்கினால், ஜனாதிபதி அவரது கட்சியை முழுமையாக கைப்பற்றும் வேலைத் திட்டத்தை கைவிட நேரும்.இது அவர்களுக்கு பெரும் அரசியல் கைசேதத்தை விளைவிக்கும்.

இவை போன்ற சிக்கல்களே அவை.

இந்த ஐந்து முக்கிய தரப்புகளில் இருந்து கிளம்பும் எதிர்ப்புகளை
சமாளிக்கும் உத்திகளை ஐ.தே.கட்சி வெளி நாட்டு உபாய வகுப்பாளர்களின் உதவியுடன் பெற்றிருக்கலாம். இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்ட போது இந்தியாவின் உபாய வகுப்பாளர்களே உதவினார்கள் என்பது இரகசியமல்ல, எனவே இவ்விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேர்ந்த அனுபவமும் அறிவும் உண்டு.இக்கட்சியே வடகிழக்கை இணத்த கட்சியாகும்.

இவ்விணைப்பை 21வருடங்கள் எவராலும் அசைக்க முடியவில்லை. அன்றைய காலத்தில் ஐ.தே.கட்சியின் உறுதியான முடிவினால் பேரின சக்திகள் இணைப்பை தடுக்க வக்கற்றிருந்தனர், ஆயினும் வீதிகள் எங்கும் டயர்களை எரித்தும், பல பஸ்களை எரித்தும், அரச உடமைகளை சேதம் செய்தும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டங்களை செய்திருந்தனர்.இவ்வார்ப்பாட்டங்கள் அன்றைய அரசினால் ஈவிரக்கமின்றி அடக்கி ஒடுக்கப்பட்டன.

காலம் கனியும் வரை காத்திருந்த
சிங்கள பெருந்தேசியவாத சக்திகள் நீதி மன்றத்தின் மூலம் மீண்டும் வடக்கையும் கிழக்கையும் பிரித்தனர். இதற்கு அன்றைய அரசின் ஊமைச் சம்மதமும் இருந்தது.

தற்போது ஐ.தே.கட்சி, இணைப்புக்கு எதிர்கொள்ளும் சவால்களை எவ்வாறு முறியடிக்க முயற்சிக்கும் என நோக்குவோம்.

எதிர்கொள்ளப்படும் சவால்களை சிங்களத் தரப்பிலிருந்து வருவன என்றும், முஸ்லிம் தரப்பிலிருந்து வருவன எனவும் இரட்டையாக சுருக்கிப் பார்க்கலாம்.

சிங்களத் தரப்பை சமாளிக்க இது வடகிழக்கு இணைப்பல்ல வடக்கையும் கிழக்கையும் மீள் எல்லை நிர்ணயம் செய்து இரண்டு மாகாணங்களாக பிரிப்பதுதான் என்று கூறி அம்பாறையில் உள்ள சிங்கள பெரும்பான்மை நிர்வாகப் பிரிவுகளை வெட்டி எடுத்தும் மொனராகலை மாவட்டத்திலும், பதுளை மாவட்டத்திலும் இருந்து ஓரிரு கிராமங்களை வெட்டி எடுத்தும் இவற்றை இணைத்து சிங்களவர்களுக்கு என்று கிழக்கில் ஒரு தனி மாகாணத்தை உருவாக்கி சிங்கள தரப்பின் எதிர்ப்பை மடக்கலாம். மேலதிகமாகத் தேவைப்பட்டால், திருகோணமலையில் உள்ள சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சேருவிலைத் தொகுதியை பொலன்னறுவை மாவட்டத்துடன் இணைத்தும் விடலாம்.
இப்படி நடந்தால் தமிழ்பேசும் ஒரு மாகாணமும், சிங்கள மாகாணம் ஒன்றுமாக இரண்டு மாகாணங்களே இருக்கும். ஆயின் சிங்களவர்களுக்கு என்ன பிரச்சினை?
தமிழர் தலைமைகளும் எதார்த்தத்தின் அடிப்படையில் இணைந்த வடகிழக்கு எனக் கருதுவது தமிழ் பேசும் நிலம் என்பதுதானே!

(((கிழக்கில் நிகழ்ந்த சிங்களக் குடியேற்றங்களின் ஆபத்து பற்றி 70 களில் அம்பாறை தமிழ், முஸ்லிம் மக்களின் மத்தியில் பிரச்சாரம் செய்ததனால்தான் தியாகி சிவகுமாரன் தலை மறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். மட்டுமல்லாது இலங்கை பாதுகாப்பு தரப்பினரால் படுகொலையும் செய்யப்பட்டார். தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக கொடுக்கப்பட்ட முதல் உயிர்க் கொடை இவருடையதுதான். இவர் போல் சிந்தித்த பலர் இன்று உயிரோடு இருந்திருந்தால் வரலாற்றில் தமிழ் முஸ்லிம் பிரிவினையே நிகழ்ந்திராது. இவரும் இவர் போல அக்காலத்தில் செயற்பட்டு உயிர் நீத்த பலரும் நிகழ்கால தமிழ் பேசும் தலைவர்களையும், பரம்பரையையும் மன்னிக்க வேண்டும்.)))

புதிய அரசியலமைப்பில் நாட்டின் அந்தஸ்து ஒற்றையாட்சி என்ற பதமா அல்லது சமஷ்டி என்ற வடிவமா என்கிற நெருக்கடிக்கு, அரசும், அதில் அங்கம் வகிக்கும் இரு பெரும் கட்சிகளும், அரசியல் சாசன விற்பன்னர்களும் அப்படியொரு பதத்தினை யாப்பில் சேர்க்கத் தேவையில்லை என்று தந்திரமாக உடன்பட்டுள்ளனர்.இதனை நாட்டு மக்களுக்கு நாசூக்காக விளக்கியும் வருகின்றனர். தமிழ்தேசியக் கூட்டமைப்பும் இவ்விடயத்தில் விட்டுக் கொடுப்புக்கு தயாராக இருப்பது போலவே தென்படுகிறது.இதே உத்தியை பாவித்து, வடக்கு கிழக்கு இணைப்பு என்று எவரும் கருதத்தேவையில்லை இது எல்லை நிர்ணயம் மட்டும்தான், வடகிழக்கு மாகாணம் என்ற பெயரைப் பாவிக்கத் தேவையில்லை என்று சொல்லி சிங்களவர்களை திருப்திப்படுத்த முடியும்.

முஸ்லிம் தரப்பை சமாளிக்க, இது நிரந்தர இணைப்பல்ல; தற்காலிகமான-நிபந்தனையுடன் கூடிய இணைப்பாகும் எனக் கூறுவார்கள்.சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கும் எனவும் உத்தரவாதம் தரப்படும்.

முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்யமாட்டார்கள், செய்தாலும் இலகுவாக அடக்கலாம், இலங்கை முஸ்லிம்கள் உத்தரவாதங்களை உறுதியாக நம்பி தொடர்ந்தும் ஏமாறத் தயாரான அரசியல் பிராணிகள், முஸ்லிம் தலைவர்கள் ரொக்கங்களின் நாயகர்கள் ஆகையால் வாங்கிவிடலாம், செயற்கையாக மார்க்கம் சார்ந்த நெருக்கடியை ஏற்படுத்தினால் அரசியல் விவகாரங்களில் இருந்து முஸ்லிம் சமூகத்தை திசைமாறச் செய்யலாம்; இந்த இடைவெளியில் உரிமையின் களுத்தை அறுத்தாலும் அந்த சமூகம் உணர்ந்து கொள்ளாது. கண்ணை மூடிக் கொண்டு தற்காலிக இணைப்பை பத்து வருடம் ஓட்டினால் முஸ்லிம்களின் அடுத்த பரம்பரை அஷ்ரஃபை மறந்ததைப் போல இதையும் மறத்துவிடும்.எனவே தற்காலிகம் நிரந்தரமாகிவிடும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு முஸ்லிம் சமூகத்தின் மீது மயக்க மருந்தை விசுறத் தெரியும், இதில் இக்கட்சிக்கு எழுபது வருட அனுபவம் உள்ளது. அக்காலத்தில் பச்சை நிறத்தை வைத்து ஏமாற்றினர்.

அது இஸ்லாத்தின் நிறமல்லவா, பள்ளிவாயில்களில் ஏற்றப்படும் கொடிகளும், அவுலியாக்களின் அங்கிகளும் பச்சையல்லவா,. ஐ.தே.கட்சி முஸ்லிம்களின் நிறத்தைக் கொண்ட கட்சி, எனவே அதற்கே நமது ஆதரவு என அரை நூற்றாண்டுகளாக செயற்பட்ட சமூகத்தின் மூன்றில் ஒரு பங்கை அஷ்ரஃப் விழிப்புணர்வூட்டி அரசியலில் வெற்றி பெற வைத்தார்.

அவர் தனது கட்சியின் கொடியில் பச்சையில் மஞ்சளைக் கலந்தும், பச்சை நிற மரத்தை சின்னமாகக் கொண்டும் முஸ்லிம்கள் அன்று சென்று கொண்டிருந்த பாதையிலேயே புகுந்து அடையாளத்தை நிறுவி முஸ்லிம்களை கவர்ந்திழுத்தார்.

தனித்துவ அரசியலில் நீலமும், பச்சையும் நமக்கு ஒரு பொருட்டல்ல, நமது அரசியல் இலக்கு ஆகக்குறைந்தது இனப்பிரச்சினைத் தீர்வில் நமக்கென்று ஒரு பங்குதான் என்பதை அஷ்ரஃப் தெளிவாகக் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்.இக்கருத்தையே நாம் பின்பற்றவேண்டும்.

நல்லாட்சி அரசின் தமிழர்களுக்கான ஆகக்குறைந்த நியாயம் வழங்கும் நிகழ்ச்சி நிரலில் கிழக்கு சிங்களவர்களுக்கும் திருப்தி தரும் தீர்வு உள்ளது.கிழக்கு முஸ்லிம்களுக்கு என்று உத்தரவாதம் மட்டுமே உண்டு. முஸ்லிம்கள் ஏமாந்தால் வடகிழக்கு இணைப்பு சாத்தியந்தான்.

ஐக்கிய தேசியக் கட்சியினால் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பூச்சாண்டித் தீர்வுகளான மாவட்டசபை, மாகாணசபை போன்றவற்றை ஏற்றுக் கொள்வது போல் நடித்து அவற்றை படிக்கட்டுகளாக பாவித்து அடுத்த கட்டத்துக்கு காய் நகர்த்தியதைப் போல் , சிங்களவர் வாழும் இடங்களை தவிர்த்து இணையும் வடகிழக்கை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு காய் நகர்த்த தமிழ்த்தேசிய ஜனநாயக சக்திகளால் முடியும்.

வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மினின் வடகிழக்கு இணைப்பு தொடர்பான கருத்துக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் மறுப்பறிக்கை. inShare (எம்.ரீ. ஹைதர் அலி) கிழக்கு மாகாணத்தினை வடக்குடன் இணைக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மினுக்கு எந்தவொரு அருகதையும் கிடையாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார். வட கிழக்கு இணைப்பு தொடர்பாக வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து வெளியிட்ட விஷேட ஊடக அறிக்கையிலேயே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் தொடர்ந்தும் அவர்… தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் போனஸ் ஆசனத்தினூடாக வட மாகாண சபையில் அங்கம் வகிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்கள் அண்மையில் பகிரங்கமாக வெளியிட்ட வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தின் மூலம் முஸ்லிம்கள் வட கிழக்கு இணைப்பிற்கு ஆதரவு வழங்குவது போன்ற ஒரு தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவரின் இந்த கருத்தானது கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களை வெகுவாக பாதித்துள்ளதோடு மிகவும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வட கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களினதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினதும் அபிலாசையாக இருக்கலாம். ஆனால் கிழக்கு முஸ்லிம்கள் வட கிழக்கு இணைப்பிற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கவில்லை என்பதனை அவர் புரிந்துகொள்ளவேண்டும். இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களின் உரிமைகளும், சுதந்திரமும் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டியதாகும். ஆனால் எமது மக்களின் உரிமைகளை உதாசினப்படுத்தும் விதத்தில் தற்போது வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களால் வெளியிட்டுள்ள கருத்தினை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என தெரிவித்தள்ளார். மேலும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வட கிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும் மறுபுறம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் வட மாகாண சபை உறுப்பினர் வட கிழக்கு இணைப்பிற்கு ஆதரவு வழங்குவதுமானது மக்களை முட்டாள்களாக நினைத்து ஏமாற்றுகின்ற ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு ஒப்பந்த அடிப்படையிலேயே நாங்கள் இணைந்திருக்கின்றோம் என்று கூறுகின்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது அவர்களுடைய ஒப்பந்தத்தில் நாங்கள் வட கிழக்கு இணைப்பிற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்ற ஒரு சரத்தினை உள்ளடக்கியிருக்க வேண்டும். ஆனால் இந்த விடயங்கள் எதனையும் தங்களது ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளாமல் வெறுமென ஆசனங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக மாத்திரம் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு இணைந்து செயற்பட்டதா என்ற சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் நிலவுகின்றது. ஒரு அமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருவரினுடைய கருத்தினை அவருடைய தனிப்பட்ட கருத்தாக ஒரு போதும் கருத முடியாது. அவ்வாறு தனிப்பட்ட கருத்து என்று கூறுவதானது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினுடைய நிருவாக கட்டமைப்பு தொடர்பான சந்தேகங்களை தோற்றுவிப்பதோடு ஐயூப் அஸ்மின் அவர்கள் வெளியிட்ட கருத்தினைத் தொடர்ந்து அவரை வட மாகாண சபையிலிருந்து மீளழைப்பு செய்யப்போவதாக தற்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையானது மக்கள் மத்தியில் ஒரு கேலிக்கூத்த்தாக மாறியிருக்கின்றது. ஐயூப் அஸ்மின் அவர்களின் மீளழைப்பு தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் சுழற்சி முறையில் வட மாகாண சபைக்கு இன்னுமொருவரை நியமிப்பதற்காகவே குறித்த மீளழைப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் கடந்த நான்கு ஆண்டுகளில் மீளழைப்பு ஒன்றினை மேற்கொள்வதில் நிலவிவந்த சட்டச் சிக்கல் காரணமாகவே தற்போது வட மாகாண சபையின் இறுதி நிர்வாக ஆண்டில் இவ் மீளழைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாகாண சபை உறுப்பினர்களை சுழற்சி முறையில் மாற்றுவதில் அத்தகைய பாரிய சட்டச் சிக்கல்கள் எதுவும் எமது நாட்டு அரசியல் சட்டத்தில் இருந்ததாக அறியப்படவில்லை. குறிப்பாக எமது கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்க கூட்டமைப்பினுடைய போனஸ் ஆசனத்திற்கு இரண்டு முறை சுழற்சி முறையில் உறுப்பினர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கருத்துக்கு அமைவாக சுழற்சி முறையில் உறுப்பினர்களை மாற்றுவதில் நான்கு வருடங்களாக சட்டச் சிக்கல்கள் நிலவி வந்ததாகவிருந்தால் ஐயூப் அஸ்மின் அவர்கள் வெளியிட்ட வட கிழக்கு இணைப்பு தொடர்பான கருத்தினைத் தொடர்ந்து குறித்த சட்டச் சிக்கல்கள் தீர்கப்பட்டு விட்டதா என்ற பாரிய சந்தேகத்தினையும் இது தோற்றுவிக்கின்றது. தங்களது மாகாண சபை உறுப்பினரை சுழற்சி முறையில் மாற்றுவதாகவிருந்தால் அது தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு செய்துகொண்ட உடன்படிக்கையில் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய எந்த விடயங்களும் அவர்களின் உடன்படிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவில்லை. உண்மையில் வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்கள் தொடர்பான பல குற்றச்சாட்டுக்கள் வட மாகாண மக்களினால் ஆதார பூர்வமாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியக்கிடைத்துள்ளது. குறித்த விடயமே ஐயூப் அஸ்மின் அவர்கள் வட மாகாண சபையிலிருந்து அவசர அவசரமாக மீளழைப்பு செய்யப்படுவதற்குரிய பிரதான காரணம் என்பதோடு நான்கு வருட காலமாக காணப்பட்ட சட்டச் சிக்கல்கள் காரணமாகவே இதுவரை காலமும் எம்மால் மீளழைப்பு ஒன்றினை மேற்கொள்ள முடியவில்லை என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினரால் குறிப்பிடப்பட்டுள்ள காரணம் மக்களை ஏமாற்றுவதற்கான வெறும் கண்துடைப்பு மாத்திரமேயாகும். எனவே வட கிழக்கு இணைப்பிற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டதனைத் தொடர்ந்து தனது உறுப்பினரை மீள்சுழற்சி செய்வதற்கு முற்பட்டுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது தனது உறுப்பினரை மீளழைப்பு செய்து அந்த இடத்திற்கு வேறு ஒருவரை நியமிப்பதற்கு மாற்றமாக வட கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டினை கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும். மேலும் வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் தனித்துவமாக செயற்பட்டு சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதே முஸ்லிம்ளின் எதிர்பார்பாகவுள்ளது. எனவே வடக்கு கிழக்கானது ஒருபோதும் இணைக்கப்படக்கூடாது என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றோம்.

SHARE