வடகிழக்கு சஊதி அரேபியாவின் ஹப்ர் அல்-பத்ன் பிரதேசத்தில் இடம்பெற்று வந்த “வடக்கின் இடிமுழக்கம்”
400
வடகிழக்கு சஊதி அரேபியாவின் ஹப்ர் அல்-பத்ன் பிரதேசத்தில் இடம்பெற்று வந்த “வடக்கின் இடிமுழக்கம்” எனும் மாபெரும் இராணுவப் பயிற்சி நடவடிக்கையின் இறுதி நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சஊதி அரேபிய மன்னரும் இரண்டு புனித ஆலயங்களின் பணியாளருமான மன்னர் சல்மான் மற்றும் பல அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் வருகை தந்திருந்தனர். குறித்த இராணுவ பயிற்சி நடவடிக்கையானது வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் இராணுவ நிகழ்வாகும்.
குறித்த பயிற்சி நடவடிக்கையில் இருபது நாடுகளைச் சேர்ந்த இராணுவத்தினர் பங்கேற்றிருந்தனர். இந்த மாபெரும் பயிற்சி நடவடிக்கையானது திட்டமிடப்பட்ட அனைத்து இலக்குகளையும் பூர்த்தி செய்து வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது என சஊதி அரேபிய பாதுகாப்பு படையின் பேச்சாளரும் தலைமைத் தளபதியுமான ஜெனரல் அஹ்மத் அஸீரி தெரிவித்தார்.
இந்த “வடக்கின் இடிமுழக்கம்” எனப்படும் மாபெரும் இராணுவப் பயிற்சி நடவடிக்கையில் 20,000 போர் தாங்கிகள், 2,540 யுத்த விமானங்கள், 460 ஹெலிகொப்டர்கள் மற்றும் 100க்கும் அதிகமான யுத்தக் கப்பல்கள் என்பனவற்றுடன் 350,000 படையினரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.