வடகொரியத்தலைவர் வர்த்தக நட்பு நாடான சீனாவிற்கு விஜயம்.

178

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன், இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு சீனா சென்றுள்ளார்.

சீன அரசாங்கத் தொலைக்காட்சி அந்தத் தகவலை வெளியிட்டது. இருப்பினும் இது குறித்து மேலதிக விபரங்களை அது வெளியிடவில்லை. கிம், இந்த ஆண்டில் 3ஆவது முறையாகச் சீனா சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைச் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசிய மறுவாரம் அவரது சீனப் பயணம் இடம்பெற்றுள்ளது.

அந்த உச்சநிலைச் சந்திப்பின் முடிவு குறித்துச் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் கலந்தாலோசிக்கவே வடகொரியத் தலைவர் சீனா சென்றிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. வட கொரியாவின் ஒரே வர்த்தக நட்பு நாடாக சீனா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE