வடகொரியாவிலிருந்து தப்பி வந்த இளம்பெண்ணின் கண்ணீர் பேட்டி

315

வட கொரியாவிலிருந்து தப்பி தென் கொரியாவுக்கு சென்ற இளம்பெண் வட கொரிய மக்கள் சுதந்திரமின்றி தவிப்பதாக கூறியுள்ளார்.

வட கொரியாவை சேர்ந்தவர் Yeonmi Park (24) இவர் 2007 வரை தான் தன் சொந்த நாட்டில் இருந்தார். கடந்த 2007ல் இவர் சீனாவுக்கு தப்பி சென்றார்.

பின்னர் தென் கொரியாவுக்கு சென்று கடந்த 2009லிருந்து அங்கு வாழ்ந்து வருகிறார்.

பின்னர் வழக்கறிஞராக ஆன Yeonmi, One Young World என்னும் உலக பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் அமைப்பு விழாவில் கலந்து கொண்டு கண்ணீர் மல்க பேசினார்.

அவர் கூறுகையில், வட கொரியாவில் வாழும் மக்களுக்கு சுதந்திரம் மறுக்கப்படுகிறது.

நாட்டை பற்றியும் அணு ஆயுதங்கள் பற்றியும் மட்டும் யோசிக்க கூடாது. நாட்டு மக்களின் வாழ்க்கையை பற்றி யோசிக்க வேண்டியதே முக்கியமாகும் என கூறியுள்ளார்.

மேலும், தான் வட கொரியாவிலிருந்து கஷ்டப்பட்டு தப்பித்து வந்த கதையையும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

SHARE