வடகொரியாவுக்கு அரிய வகை பழங்களை பரிசாக அளிக்கும் தென் கொரியா

217

நீண்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக தென் கொரியாவில் இருந்து உணவுப் பொருட்களை வடகொரியாவுக்கு அனுப்ப அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

வடகொரிய மக்கள் மிக விரைவில் தென் கொரியாவின் அரிய வகை பழம் ஒன்றை சுவைக்க உள்ளனர்.

கிச்சிலி பழ வகையை சேர்ந்த இந்த பழங்களில் சுமார் 20,000 பெட்டிகளை வடகொரியாவுக்கு நட்பின் பரிசாக வழங்க தென் கொரியா முடிவு செய்துள்ளது.

இது கடந்த 10 ஆண்டுகளில் முதன் முறை என கூறப்படுகிறது. தற்போது கிச்சிலி பழங்களின் காலம் என்பதால் குறித்த பழ வகைகளையே பரிசாக அனுப்ப தென் கொரியா முடிவு செய்துள்ளது.

மட்டுமின்றி வடகொரியாவில் கிச்சிலி பழங்கள் அரிதிலும் அரிது என கூறப்படுகிறது. முன்னதாக வடகொரியாவில் இருந்து சுமார் 2 டன் அளவுக்கு விலையுயர்ந்த பைன் காளான்களை கிம் ஜாங் உன் தென் கொரியாவுக்கு பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு நன்றி கூறும் வகையில் தென் கொரியா கிச்சிலி பழங்களை அனுப்ப முடிவு செய்துள்ளது.

SHARE