
ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள தடைகளை மீறி இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு வடகொரியா சட்டவிரோதமாக பொருட்களை அனுப்பியுள்ளதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஆறு மாத காலத்துக்கு நிலக்கரி, இரும்பு போன்ற பொருட்களை இவ்வாறு அனுப்பியுள்ளதாக ஐ.நா. சபை குறிப்பிட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் இலங்கை, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இந்த பொருட்களை அனுப்பியுள்ளது.
குறித்த பொருட்களின் பெறுமதி 240 மில்லியன் பிரித்தனிய பவுன்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா தடைகளை மீறியுள்ளமை தொடர்பில் ஐ.நா. சபையின் 8 நிபுணர்கள் கொண்ட விசாரணைக்குழு தயாரித்துள்ள 111 பக்கங்கள் கொண்ட அறிக்கையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.