வடக்கின் வடுக்கள் போல் தோன்றும் சாலாவ…!

258

salawa-camp-060616-seithy (1)

வடக்கில் யுத்தம் முடிவடைந்த பின்னர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களும், பாதிக்கப்பட்ட சுவடுகளும் எவ்வாறு காட்சியளிக்கப்பட்டதோ அதே போன்றுதான் இன்று கொஸ்கம பிரதேசம் காணப்படுகின்றது.

கடந்த மாதம் அவிஸ்ஸாவலை சாலாவ இராணுவ முகம் முற்றாக தீக்கிரையாகியது. அந்தப் பிரதேசத்திலுள்ள பல வீடுகளும், வைத்தியசாலைகளும், பாடசாலைகளும் பெரும் சேதமடைந்தன.

இந்த கோர விபத்து ஏற்பட்டு ஒரு மாதங்களை கடந்த நிலையிலும் இன்று மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாத அவல நிலையில் உள்ளனர்.

வீடுகள் இல்லாமல் மக்கள் சிறிய கூடாரங்களில் தங்கியுள்ளனர், பாடசாலை மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் முடங்கி கிடக்கின்றனர், உத்தியோகத்தர்கள் வேலைக்குச் செல்லாமல் அவதிப்படுகின்றனர். இதுதான் இவர்களது வாழ்க்கை.

இந்த நிலையை வடக்கு மக்கள் பார்க்கும் போது கடந்து வந்த யுத்தத்தை நினைவுபடுத்துகின்றனர். கூடாரங்களைப் பார்க்கும் போது தாம் வாழ்ந்த முள்ளிவாய்க்காலை நினைத்துப் பார்க்கின்றனர்.

கொஸ்கம பிரதேசத்திற்குச் சென்றால், கடந்து வந்த காலங்கள் கண்முன் நிற்கின்றன. வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கு செல்வதைப்போன்ற ஒரு நினைவு அனைவரது மனதிலும் அலையாய் அடிக்கின்றது.

அரசியல்வாதிகள் வருகின்றனர், பல உறுதிமொழிகளையும் தருகின்றனர். ஆனால் தீர்வு தருவோர் யாரும் இல்லை இந்த மக்களுக்கு.

SHARE