வடக்கில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளின் தரம் தொடர்பில் ஆராய குழு விஜயம்

135

வடக்கில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளின் தரம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கில் மீள் குடியேற்ற அமைச்சின் குழுவொன்று இன்றைய தினம் வடக்கின் மாவட்டங்களிற்கு வருகை தரவுள்ளனர்.

மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனின் ஏற்பாட்டில் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் தொடர்பான தரத்தினையும் அவ்வாறு அமைக்கப்படும் வீடுகளில் எழுகின்ற நடைமுறைப் பிரச்சனைகளை ஆராய்வது என்ற அடிப்படையிலேயே குறித்த குழுவினர் இன்றைய தினம் வடக்கிற்கு வருகை தருகின்றனர்.

வடக்கில் மட்டும் 80 ஆயிரம் வீடுகள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் வடக்கிற்குப் பொருத்தமான கல்வீட்டினை வழங்குமாறு வடக்கின் பிரதிநிதிகள் கோரும் நிலையில் இதற்கு பதிலீடாக பொருத்து வீட்டினை வழங்குவதே உசிதமானது என மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவித்து வரும் நிலையில் இன்றைய பயணம் அமைகின்றது.

இதேநேரம் வடக்கில் இந்த ஆண்டு மேற்கொள்வதற்காக 5 ஆயிரம் கல்வீடுகளை வழங்க பிரதமர் செயலகம் இணங்கிய போதும் அதனை நடைமுறைப்படுத்த இணக்கம் தெரிவித்த மீள்குடியேற்ற அமைச்சிடம் இருந்து அதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான எந்த முடிவுகளும் அறிவிக்கப்படவில்லை என வடக்கில் உள்ள சில மாவட்டச் செயலகங்கள் தெரிவிக்கின்றன.

SHARE