புதூர் காட்டுப்பகுதியில் ஆதிக்குடிகளான நாகர்களின் புராதன குடியிருப்புக்கள் இனங்கானப்பட்டது.
பாலியாற்றுப் படுக்கையில் அமைந்துள்ள புதூர் கிராமத்தின் மேற்குப்பகுதியில் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த நாகர்களின் புராதன குடியிருப்பு எச்சங்கள் அங்காங்கே பரவலாக கானப்படுகின்றது.
இத்தொல்லியல் தளங்களை இணங்கண்டு, ஆவணப்படுத்தும் நோக்கில் 21-06-2018 அன்று பாலியாற்றின் இருபுறமும் உள்ள புதூர் நவ்விக்கு இடைப்பட்ட காட்டுப் பகுதிக்கு தொல்லியல் தடயத்தை வரலாற்று ஆய்வியல் மாணவன் ஒருவன் சென்றிருந்தார்.
இரண்டு இடங்களில் சராசரி ஏழு அடி உயரமான 9”12” கனதியான கருங்கற்றூண்கள் நிமிர்ந்த நிலையில் இன்றும் நிற்கின்றன.
சில தூண்கள் உடைக்கப்பட்டு பாதி நிலத்தில் வீழ்ந்து கிடக்கின்றன.
அவ்விடத்தை சுற்றிலும் ஆங்காங்கே கருங்கல்லிலான தூண் தாங்கு கற்கள் நிலமட்டத்தில் நிறுவப்பட்ட நிலையில் உள்ளது.
இவை 8,10,12 அடி அகலங்களில் 20தொடக்கம் 40அடி நீள அளவில் நிறுவப்பட்டிருக்கிறது. அவற்றிற்கிடையே நிலத்திற்கு செங்கள் பாவுகற்கள் பதிக்கப்பட்டுருப்பதனை அவதானிக்கலாம்.
இக்குடியிருபுக்கள் பாலியாற்றின் கிளையாறுகளை அண்டியதாகவும் பாழடைந்த புராதன குளக்கட்டுக்களின் அந்தப் பகுதியாகவும் இருப்பதை அவதானிக்கலாம்.
https://youtu.be/1dLOJ8nbLNE
அவ்விடங்களில் பல நூற்றாண்டுகால வயதுடைய புளியமரங்களையும் அவதானிக்கமுடிந்தது.
இன்னுமோர் இடத்தில் கட்டிட நிர்மாணத்திற்காக செவ்வக கற்பாறைகள், நீண்ட தூண்கள்,சதுரக்கற்கள் என்பன குவியலாக பெருமளவு கானப்பட்டது அதற்கு அண்மையாக நான்கு தூண்தாங்குகல் நிறுவப்பட்ட இடத்தின் மையப்பகுதியில் புதையல் தோண்டுவோர் ஐந்தடி ஆழத்தில் குழி தோண்டி தொல்லியல் தடங்களை நாசப்படுத்தியுள்ளனர்.
தூண்தாங்கு கற்களை பயன்படுத்தியவர்கள் நாகர்கள். அவர்கள் காலத்தில் பொன் பெருமளவு பாவனையில் இருக்கவில்லை.
அவர்கள் திரவியங்களை புதைத்துவைக்கும் அளவிற்கு அக்கால சமூகம் இருக்கவுமில்லை என்பதுதான் உண்மை.
ஈழத்தமிழரின் மூத்தையார்களான நாகர்களின் தொல்பொருள் எச்சங்களை பாதுகாத்து நவீன ஆய்வுமுறைக்கு உற்படுத்துவதன் மூலமே அவர்களின் திறமை வெளிபட்டுள்ளது.
மேலும் ஈழத்ததில் தமிழினத்தின் வரலாற்றுத்தொன்மையை ஐயந்திரிவுபட நிறுவிட முடியும்.