வடக்கில் களைக்கட்டியுள்ள சிறு போக வெங்காயச் செய்கை! விளைச்சல் அமோகம்

236

யாழ். வலிகாமம் பகுதியில் பல நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலப் பகுதியில் பயிரிடப்படுள்ள பெரும் போக வெங்காயச் செய்கை அறுவடை நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது.

இம்முறை வெங்காயத்தின் விளைச்சல் அமோகமாகவுள்ளதாக வலிகாமம் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சுன்னாகம், மருதனார்மடம், இணுவில், உடுவில், தெல்லிப்பழை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலப் பகுதியில் வெங்காயச் செய்கையில் ஈடுபட்டிருந்தனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (5)

சிறுபோக வெங்காயச் செய்கை சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களிலேயே விவசாயிகளால் ஆண்டு தோறும் செய்கை பண்ணப்படுவது வழமை.

சித்திரை மாதம் பல ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்டிருந்த வெங்காய அறுவடை முற்றுப் பெற்றுள்ள நிலையில், பெருமளவு நிலப் பரப்பில் பயிரிட்டிருந்தவெங்காய அறுவடையில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த வருடம் வலிகாமத்தில் வெங்காயம் அதிகமான விளைச்சலைக் கொடுத்துள்ளதாக வெங்காயச் செய்கையாளர்கள் பலரும் தெரிவிக்கின்ற போதும், விலை குறைவடைந்துள்ளமையால் தாம் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (6)

இம்முறை வலிகாமத்தில் விவசாயிகள் பெரும்பாலானோர் வெங்காயச் செய்கையில் ஈடுபட்டமையும், வெளிநாட்டிலிருந்து வெங்காயம் அதகிகளவில் இறக்குமதி செய்யப்படுவதுமே விலை குறைவுக்குக் காரணமென அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் எதிர்காலத்தில் வெங்காயத்துக்கு அதிக தொகை விலையை நிர்ணயம் செய்வதுடன், உள்நாட்டு விவசாயிகள் நன்மை பெறும் வகையில் வெளிநாட்டு வெங்காய இறக்குமதியை முற்றாகத் தடை செய்ய வேண்டுமென்பதும் விவசாயிகளின் கோரிக்கையாகவுள்ளது.

இதேவேளை கடந்த மே மாத நடுப் பகுதியில் தொடர்ச்சியாக இரு நாட்கள் நீடித்த பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக வலிகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த வெங்காயச் செய்கையாளர்கள் பெருமளவு நட்டத்தை எதிர்நோக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (7) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (8)

SHARE