வடக்கில் தொடரும் பெரும் வறட்சி  குடிநீர் இன்றி மக்கள் அவதி

205

625-0-560-320-160-600-053-800-668-160-90

வடமாகணத்தில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக பொது மக்கள் குடிநீர் பிரச்சனையை எதிர் கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில பிரதேசங்களில் குடிநீர் பிரச்சினையால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான கிளிநொச்சி குளம் நீர்வற்றி வறட்சியின் உச்சத்தை நிருபித்துகாட்டுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

 

இதேவேளை, இந்த குளத்தில் இருந்து பொது மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தூயநீர் வழங்கும் பிரதான குளமாக கிளிநொச்சி குளம் இருகின்றது. இந்த நிலையில் குளம் வற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE