வடக்கில் படையினரின் வசமுள்ள பொது மக்களின் காணிகள் குறித்த தகவல்கள் திரட்டப்படும்

313

வடக்கில் படையினரின் வசம் உள்ள பொது மக்களின் தனியார் காணிகள் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தகவல்களைத் திரட்டவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்

இவ்வாறு திரட்டப்படும் தகவல்களை ஜனாதிபதிக்கு அறிக்கை வடிவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேசிய பாதுகாப்பு நலன்களுக்குத் தேவைப்படும் காணிகள் விடுவிக்கப்பமாட்டாது எனவும் அந்தக் காணிகளின் உரிமையாளர்களுக்கு மாற்று இடங்களில் காணிகள் வழங்கப்படும் என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கில் உள்ள படைத்தளங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது தொடர்பான எந்த உத்தரவும் தமக்குக்கிடைக்கவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.valivadakku

SHARE