வடக்கில் பதவிக்கு வந்தார் ஆனோல்ட்??

186

வடக்கு மாகாணத்தின் புதிய கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறை அமைச்சராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்படவுள்ளார்.

இன்று மாலை யாழ்.நகரில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி காரியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தலைமையில் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், ஈ.சரவணபவன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் 15 பேர்களுக்குமிடையில் புதிய கல்வி அமைச்சர் நியமனம் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

வடக்கு மாகாணத்தின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராசா தனது பதவியை இராஜினாமா செய்ததனைத் தொடர்ந்து அந்த வெற்றிடத்திற்கு வடமாகாண விளையாட்டு அமைச்சின் இணைப்பாளராக இதுவரை காலமும் பணியாற்றிய இம்மானுவேல் ஆனோல்டை கிளிநொச்சி மாவட்ட மாகாண சபை உறுப்பினர் பா.அரியரட்ணம் அவர்கள் முன்மொழிய தமிழரசுக் கட்சியின் ஏனைய மாகாண சபை உறுப்பினர்கள் ஏக மனதாக ஏற்றுக்கொண்டார்கள்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சராக, மாகாணசபை உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட்டை நியமிக்குமாறு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, இலங்கை தமிழ் அரசுக் கட்சி பரிந்துரைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE