வடக்கில் பாலியல் வியாபாரத்துக்காக வாடிக்கையாளர்களுக்கான வலிந்தழைப்பு)
முன்னாள் யுத்த வலயமான தீவின் வட பகுதியில் அதிகமான பெண்கள் குடும்பம் போற்றும் பணியை ஏற்றெடுத்துள்ளார்கள், அந்த பிராந்தியம்; உயிர் வாழ்வதற்காக பெண்களை பாலியல் பணிக்கு திரும்புவதை அதிகரிக்கச் செய்வதன்மூலம் ஒரு சாதனையை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக அவர்களுடன் பணியாற்றிவரும் உள்ளுர் குழுவினரது மதிப்பீட்டின்படி, பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை சுமார் 7.000 வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது,இது ஒரு அனுபவமற்றவர்களின் குறைவான ஒரு மதிப்பீடு என்று சிலரால் கருதப்படுகிறது.
வட பகுதியின் வாழ்வாதாரம் மற்றும் பொது சுகாதாரம் என்பனவற்றை திட்டமிடும்,மத்திய மாகாணத்தின் கண்டி நகரை தளமாக கொண்டியங்கும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சங்கம் என்கிற தொண்டு நிறுவனம் ஒன்றின் தலைவரான விசாகா தர்மதாஸ, ஐ.ஆர்.ஐ.என் னுக்கு தகவல் தருகையில்,” (உள்ளுர்) பெண்கள் தலைமையிலான வீட்டுடமை மற்றும் வாழ்வாதார தேவைகள் பற்றிய ஆய்வு ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது கிடைத்த புதிய கண்டுபிடிப்பு இது.ஆண்கள் இறந்தோ அல்லது காணாமற்போனதாகவோ அறிவிக்கப்பட்டுள்ள வீடுகளில் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்கள் அதை போற்றுவதற்காக பாரிய அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார்கள். அது கணிசமான சதவீத பெண்களை தயக்கத்துடனாவது பாலியல் தொழிலுக்கு மாறும்படி செய்துள்ளது’’.
2012ம் ஆண்டு அரசாங்கத்தின் மதிப்பீட்டின்படி தீவின் வடக்கில் 59,000க்கும் மேற்பட்ட பெண்கள் தலைமையிலான வீட்டுடமைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.’’ஒரு காலத்தில் அவர்களது தந்தை,கணவன் அல்லது சகோதரனால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சுமைகளை இப்போது இவர்கள் சுமக்கவேண்டி உள்ளது’’ என்று தர்மதாஸ மேலும் தெரிவித்தார்.
வடக்கிலுள்ள கடுமையான இராணுவ பிரசன்னம்,அத்தோடுகூட தென்பகுதி ஆண்கள் வடக்கில் கட்டுமான வேலைகளை ஏற்றெடுத்து நடத்துவது என்பன பாலியில் வியாபாரம் அதிகரித்திருப்பதற்கான சில ஒழுங்கான காரணங்கள் என்று அவர் ஐ.ஆர்.ஐ.என் னிடம் தெரிவித்தார்.
அதற்கு மேலதிகமாக புலம்பெயர் சமூகத்திலுள்ள ஸ்ரீலங்காவில் பிறந்த தமிழர்கள் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களின் பின் தங்கள் சொந்த இடங்களுக்கு வருகை தருவதும் பாலியல் வியாபாரத்துக்கான கிராக்கியை அதிகரித்திருக்கிறது, என்று யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு சமூக பணியாளரான சாந்தினி வைரமுத்து ஐ.ஆர்.ஐ.என் னிடம் தெரிவித்தார்.
தங்களை தற்காத்துக் கொள்ளுதல்
பெண்களை அடிமை நிலையில் வைத்திருப்பதற்கு இன்னமும் முக்ககியமான காரணிகளாக சாதி மற்றும் வர்க்கம் என்பன கோலோச்சும் வடக்கில் பாலியல் பெரும்பாலும் விலக்கப்பட்ட ஒன்றாகவே கருதப்படுகிறது. தந்தைமாருக்குப் பின்னர் பெண்கள் அவர்களது கணவன்களாலும் பின்னர் அவர்களது மகன்களாலுமே கவனிக்கப் படுகிறார்கள். மூன்று தசாப்தங்களாக தொடர்ந்த உள்நாட்டு யுத்தம் மற்றும் அந்தப் பிராந்தியத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களின் இழப்பு என்பன இந்த மரபு மற்றும் கட்டமைப்பை தவிடு பொடியாக்கிவிட்டது, முன்பு விவசாய வேலைகள் அல்லது கல்வித் தேவைகள் என்பனவற்றை தவிர ஏனையவற்றுக்கு தங்கள் வீட்டைவிட்டு வெளியேற ஊக்கமளிக்கப்படாத பெண்கள் இப்போது தங்களை தற்காத்துக் கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
“ கட்டமைப்புகள் மாறிவிட்டன மற்றும் போக்குகளும் மாறிக்கொண்டிருக்கின்றன இதன் காரணமாக புதிய சமூக அக்கறைகள் மேலெழுந்துள்ளன” என்று வைரமுத்து மேலும் தெரிவித்தார்.”இந்தக் கிராமங்களில் அவ்வப்போது பாலியல் தொழிலாளிகள் இருந்திருக்கலாம், ஆனால் சமூத்தின் அறிவுக்கு எட்டும் அளவுக்கு இருந்ததில்லை” என்று சாந்தினி தெரிவித்தார்.
சட்டப்படி பாலியல் தொழில் சட்டவிரோதமானது.
ஆயிரக்கணக்கான தமிழ் ஆண்கள் போரின் காரணமாக இறந்துவிட்டார்கள் அல்லது காணாமற்போனதாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். கலாச்சார பாரம்பரியம் எனும் போர்வையின்கீழ் பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக மாறும் இந்த விடயத்தை மூடி மறைப்பதில் அர்த்தமில்லை. அது நடக்கிறது மற்றும் சிறப்பான வாழ்வாதார உதவிகள் எங்களுக்கு தேவையாக உள்ளது” என்றார் மன்னார் பெண்கள் அபிவிருத்தி கூட்டமைப்பு மற்றும் மன்னார் பெண்கள் ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் அமைப்பு என்பனவற்றின் நிறுவனரான ஸ்ரீன் சருர், இந்த அமைப்பு வடக்கிலுள்ள மோதலினால் பாதிக்கப்பட்ட பெணகளுக்காக பணியாற்றி வருகிறது.
யாழ்பாணத்தை தளமாகக் கொண்ட பெண்கள் மற்றும் அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் சரோஜா சிவச்சந்திரன், அவரது நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, 2010 ம் ஆண்டிலிருந்து இன்றுவரை வடக்கில் சுமார் 1,500 பெண்கள் தலைமையிலான குடியிருப்பாளர்கள் உள்ளனர்(இந்த ஆய்வு நிறைவு செய்யப்பட்டு வருகிறது) கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பற்றி பெருமையடித்துக் கொள்ளும் ஒரு பிரதேசத்தில் பாலியல் வர்த்தகம் மெல்ல மெல்ல வேரூன்றி வருகிறது என்பதை இந்தக் காரணம் நம்பவைக்கிறது என்று அவர் ஐ.ஆர்.ஐ.என் னுக்கு தெரிவித்தார்
மிகச்சில வாழ்வாதார தெரிவுகள்
பாரம்பரியமாக இல்லத்தரசிகளாக வாழ்ந்த பெண்கள் பாலியல் தொழிலை தவிர்த்து வேறு வகையில் வருவாய் வளங்களை பெறுவதற்கான சூழ்நிலைகள் தேவையாக உள்ளன என்று சிவச்சந்திரன் சொன்னார். “அவர்கள் வேறு தெரிவுகளை மேற்கொள்வதை நாங்கள் ஊக்குவிக்க முயற்சிக்கிறோம். ஆனால் அவர்கள் தங்களுக்கு சிறிதளவு தெரிவே உள்ளதாகச் சொல்கிறார்கள்” என்று தனது பெயரை வெளியிட விரும்பாத வடக்கின் மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் ஒரு சுகாதாரப் பணியாளர் தெரிவித்தார்.” நாங்கள் அவர்களுக்கு ஆணுறைகளை வழங்குவதுடன் பாதுகாப்புக்காக கருத்தடை பற்றிய ஆலோசனைகளையும் வழங்குகிறோம்”.“இந்தப் பிரச்சினை எந்த மட்டத்தில் இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது.பாலியல் வியாபாரம் சட்டவிரோதமாக உள்ள ஒரு நாட்டில் கணிசமானளவு ஆய்வுகளை மேற்கொள்ளாமல் அதன் எண்ணிக்கையை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் நடவடிக்கைக்கும் மற்றும் கவனத்துக்கும் அது தகுதியுள்ளதாகிறது” என்று சமூக சேவைகள் பிரதி அமைச்சர் சந்திரசிறி சூரியாராய்ச்சி ஐ.ஆர்.ஐ.என் னுக்குத் தெரிவித்தார்.
வடக்கிலுள்ள பெரும்பான்மையான தமிழர்களால் பின்பற்றப்பட்டு வரும் இந்து சமயத்துடன் தொடர்புள்ள வடக்கின் ஆணாதிக்கம் மற்றும் மிகவும் பழமைவாத சமூக கட்டமைப்பு என்பன ஆய்வாளர்கள் அங்கு பாலியல் தொழில் பற்றி ஆய்வு செய்வதற்கு தடையாக உள்ளன, ஆனால் சுகாதார பணியாளர்கள் பெண்களுடன் பணியாற்றும் சமூக ஆhவலர்கள் தெரிவிப்பது, அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த ஏராளமான பாரம்பரிய குடும்ப போற்றுபவர்களின்(ஆண்கள்) இழப்பு,பெண்களின் வாழ்வாதாரங்களுக்கு தீவிர இடையூறு ஏற்படுத்தியுள்ள யுத்தம், மற்றும் மிகவும் மெதுவாக திரும்பிக்கொண்டிருக்கும் இயல்பு நிலை என்பனவே அவர்கள் பாலியல் தொழிலுக்கு தீரும்புவதற்கான முக்கிய காரணங்கள் என்று.
“ நான் ஒரு பாலியல் தொழிலாளியாக மாற விரும்பியதில்லை. நான் ஒரு மதிப்புள்ள இந்துக் குடும்பத்திலிருந்து வந்தவள். யுத்தம் காரணமாக எனது தந்தை மற்றும் கணவர் ஆகிய இருவரும் இறந்துவிட்டார்கள்.மூன்று பெண்கள் உள்ள குடும்பத்தில் நான்தான் மூத்தவள். எனது தாயாருக்கும் எனது இரண்டு சகோதரிகளுக்கும் மற்றும் எனது ஒரே மகனுக்கும் நான் சம்பாதிக்கவேண்டியுள்ளேன்” என்றார் 20 வயதிலிருந்தே விதவையாகியுள்ள கிளிநொச்சியை சேர்ந்த 29 வயதான வாசுகி இராமலிங்கம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது).
மரபு ரீதியாக இந்துக்கள், விதவைகள் அசகுனமானவர்கள் மற்றும் மறுமணத்துக்கு தகுதியற்றவர்கள் எனக்கருதி பெண்களை, பரவலான வேலையில்லா திண்டாட்டமுள்ள ஒரு பிரதேசத்தில் அவர்களின் குடும்பங்களை அவர்களே தனியாக கவனிக்கும்படி விட்டுவிடுகிறார்கள்.
நாட்டின் சனத்தொகையில் 12 வீதமுள்ள தமிழ் சிறுபான்மை இனத்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தீவின் வட பகுதியை ஒரு தனி இன நாடாக துண்டாடுவதற்கு பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களான தமிழீழ விடுதலைப் புலிகள்(எல்.ரீ.ரீ.ஈ) 26 வருடங்களாக யுத்தம் நடத்தினார்கள். அரசாங்கப்படைகளால் எல்.ரீ.ரீ.ஈ நசுக்கப்பட்டு 2009 மே மாதம் முடிவுக்கு வந்த அந்த யுத்தத்தின் காரணமாக 60,000 உயிர்கள் காவு கொள்ளப்பட்டன என ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.