வடக்கில் புதிய அவசர அம்புலன்ஸ் சேவை!

151

சுவசெரிய எனும் அவசர அம்பியுலன்ஸ் வண்டி சேவை வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்படவிருக்கும் இந்த அவசர அம்புலன்ஸ் சேவைக்குரிய இலக்கமாக 1990 கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ம் திகதி இந்தச் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதால் வடமாகாணத்திற்கு 20 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்படவுள்ளன.

அவற்றில் யாழ்ப்பாணத்திற்கு 7 அம்பியுலன்ஸ் வண்டிகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 4 அம்புலன்ஸ் வண்டிகளும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு தலா 3 அம்புலன்ஸ் வண்டிகளும் வழங்கப்படவுள்ளன.

SHARE