வடக்கில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிரந்த வீடுகள் வழங்க வேண்டும் – டக்ளஸ்

251
வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் அநேகர் தற்காலிக மற்றும் அரை நிரந்தர வீட்டுத் திட்டங்களில் குடியேற்றப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு முழுமையான,வீடுகளை வேண்டுமென ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்துள்ளார்.

மீள்குடியேற்ற, புனரமைப்பு அமைச்சர் டி. எம். சுவாமிநாதனிடம் இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், கடந்த ஆட்சிக் காலத்திலும், அதன் பின்னர் தற்போதைய ஆட்சியிலும் எமது மக்களில் பலர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், இம் மக்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாக செய்துகொடுக்கப்படாத நிலைமைகளும் காணப்படுகின்றன. அவை குறித்து உரிய அவதானம் செலுத்தப்பட்டு, அவை தீர்க்கப்பட வேண்டும்.

அத்துடன், மீள்குடியேறிய மக்களில் அநேகர் தற்காலிக மற்றும் அரை நிரந்தர வீடுகளிலேயே குடியேற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டு பல காலம் கடந்துள்ள நிலையில் அவ்வீடுகள் தற்போது சிதைவுற்ற நிலையில் காணப்படுகின்றன.

அத்துடன், தொடர்ந்தும் இம் மக்களால் தற்காலிக மற்றும் அரை நிரந்தர வீடுகளில் குடியிருக்க இயலாத நிலையும் காணப்படுகின்றது.

எனவே, இவ் விடயம் குறித்து அவதானம் செலுத்தி, முழுமையான நிரந்தர வீட்டுத் திட்டங்களை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா , இந்திய அரசிடம் கலந்துரையாடி, இந்திய வீட்டுத் திட்டத்தை தான் பெற்றதையும் இங்கு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Douglas Devananda_2

SHARE