வடக்கில் வன்முறையை எதிர்பார்த்து காத்திருக்கும் பௌத்த விகாராபதிகள்

247

முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதேசத்தில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுவரும் சிறிசம்போதி மகா விகாரைக்கு அதன் விகாராதிபதி சிறப்பு பாதுகாப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி கொக்கிளாய் விகாரை வளாகத்தை சுற்றி விசேட மின் குமிழ்கள் பொருத்தி இரவு முழுவதும் ஒளிரவிட்டு பகல்போல் ஆக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அண்மைய நாட்களாக இனவாத கருத்துக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளினால் வடக்கில் உள்ள புத்த விகாரைகளை தமிழ்மக்கள் தாக்கக்கூடும் என்று சில தேரர்கள் அச்ச மடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலங்கையில் இனவாதம் பரப்பும் செயற்பாடுகளில் சில தேரர்கள் ஈடுபட்டுள்ளதை வடக்கில் விகாரைகளுக்கு பாதுகாப்பு வழங்க நினைக்கும் விகாராதிபதிகள் ஒப்புக் கொண்டுள்ளதாகவே கருதப்படுகின்றது.

இந்த நிலையில் பொது மக்கள் நாட்டின் சட்டத்தை மதித்து செயற்படுவதாகவும் தொடர்ந்தும் அவ்வாறே செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

625-0-560-320-160-600-053-800-668-160-90-8

SHARE