வடக்கு அதிவேக பாதையை திருகோணமலை வரை விஸ்தரிக்க நடவடிக்கை

347

 

வடக்கு அதிவேக பாதையை தம்புள்ளை மற்றும் ஹபரணை ஊடாக திருகோணமலை வரை விஸ்தரிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக, உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மூன்று அதிவேக பாதைகளுக்கும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE