வடக்கு ஆளுநருக்கும் அமைச்சர் டெனிஸ்வரனுக்குமிடையிலான விசேட சந்திப்பு…

270
வடக்கு ஆளுநருக்கும் அமைச்சர் டெனிஸ்வரனுக்குமிடையிலான விசேட சந்திப்பு…
9f78774a-ff1e-4518-ab42-422864ea8a1c 086e9494-a8dc-406c-8f8d-bc05aa5f28c3 962ceae2-add6-4728-9190-076db1da0588
மன்னார் மாவட்டத்திற்கு 23-05-2016 திங்கள் காலை வருகைதந்த வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூறே அவர்கள் மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களை மனாரில் உள்ள அவரது உப அலுவலகத்தில்  வைத்துச் சந்தித்து விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இவ் விசேட கலந்துரையாடலில், மன்னார் மாவட்டத்தின் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாக, விசேட விதமாக வைத்தியசாலை தொடர்பாகவும், வெள்ள நீர் வடிந்தோடும் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் தொடர்பாகவும் மற்றும் மாவட்டத்தின் தற்போதைய அவசிய தேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளதாக அறியமுடிகின்றது. அதே வேளை அமைச்சர் டெனிஸ்வரன் அவர்களால் மாவட்டத்தின் பல விடயங்கள் ஆளுநருடைய கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. குறிப்பாக இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பினை அதிகரிக்கும்பொருட்டு பொருத்தமான தொழிற்சாலைகளை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
SHARE