வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும்! பாதுகாப்பு செயலாளர்

220

வடக்கு கிழக்கில் ராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்ந்தும் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் அறிவித்துள்ளார்.

நேற்று வேயன்கொட பண்டாரநாயக்க பாடசாலையில் நடைபெற்ற வைபவமொன்றில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது திருப்தியான பாதுகாப்பு நிலவரம் காணப்படுகின்றது.

இதன் காரணமாக தேவைக்கு அதிகமாக இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

இதன் கீழ் ஒருசில ராணுவ முகாம்கள் மூடப்பட்டு , அந்தக் காணிகள் உரியவர்களுக்கு கையளிக்கப்படும்.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, இராணுவத்தினரின் கௌரவத்தை பாதுகாப்பதிலும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து செயற்படும்.

அதே போன்று பொதுமக்களின் கருத்துக்கள் வெளியிடும் சுதந்திரத்துக்கும் மதிப்பளித்து அரசாங்கம் செயற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Karunasena-Hettiarachchi-720x480

SHARE