தைப்பொங்கலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள சகல மாகாணப் பாடசாலைகளுக்கும் தைப்பொங்கல் தினத்திற்கு முதல்தினமான திங்களன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதற்கான அனுமதியை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனும் வழங்கியுள்ளனர்.
தைப்பொங்கலுக்கு முதல் தினமான திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் அதற்கான நாள் இம்மாதம் 19ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தைப்பொங்கலை முன்னிட்டு இவ்வாறானதொரு விடுமுறையை வழங்கியுள்ளதையொட்டி வடக்கு, கிழக்கு தமிழ்ச்சமூகம் ஆளுநர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளது.