வடக்கு-கிழக்கு மாகாணங்களைப் பிரித்தது தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதற்கான சதித்திட்டமா?

298

 

வடக்கு-கிழக்கு மாகாணங்களை எடுத்துக்கொள்ளும்போது அம் மாகாணங்களில் தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாகவும், அதேமொழியைப் பேசும் இஸ்லாமி மக்கள் சிறுபான்மையாகவும் வாழ்ந்து வருகின்றார்கள். இஸ்லாமிய மக்கள் அதிகளவில் வடக்கை விடக் கிழக்கில் வசித்து வருகின்றார்கள். வடக்கில் மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றார்கள். முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் இம்மக்கள் வசித்து வருவதோடு யாழ்ப்பாணத்திலும் தொன்றுதொட்டு குறிப்பிடப்பட்ட பகுதிகளில் வசித்து வருகின்றார்கள். யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இம் மக்கள் விடுதலைப்புலிகளின் நிழல் ஆட்சியின்போது அங்கிருந்து வெளியேற்றப்பட்டமையும், தற்போது மீள் குடிNறியுள்ளமையும் தெரிந்ததே. இம்மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து விடுதலைப்புலிகளினால் வெளி யேற்றப்பட்டமை தொடர்பில் ஏனைய பிரதேசங்களிலுள்ள இஸ்லாமிய மக்களோ, இஸ்லாமிய அரசியல்வாதிகளோ விடுதலைப் புலிகளின் அந்நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய மக்களின் தவறு காரணமாக விருந்ததுபோலும் என்னும் எண்ணப்பாங்கினால் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. எனி னும் துரோக எண்ணங்கொண்ட சில இஸ்லாமிய அரசியல்வாதிகளும் பொது அமைப்புக்களும் மட்டுமே இவ்விடயங்கள் தொடர்பில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்தை வெளியிட்டிருந்தனர்.

wigneswaran__vick

கிழக்கு மாகாண சபையில் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அரச தரப்பினரோடு விரும்பியோ விரும்பாமலோ இணைந்து ஆட்சி அமைப்பதற்கு இவ் வடக்கு-கிழக்கு மாகா ணப் பிரிவினை மிகுந்த உறுதுணையாக அமைந்துள்ளது. வடக்கு-கிழக்குப் பிரியாமல் ஒரே மாகாண சபையாகச் சேர்ந்து இயங்குமாகவிருந்தால் இந்நிலை தவிர்க்கப்படும் வாய்ப்புண்டு. எனவே வடக்கு-கிழக்கில் வதியும் தமிழ், இஸ்லா மிய மக்களை அவர்கள் ஒரே மொழியைப் பேசுபவர்களாகவிருந்தபோதுங்கூடப் பிரித்துவைத்துத் தமது அரசியல் அதிகாரத்தை அப்பகுதிகளில் நிலைநாட்டுவதற்கான ஒரு சதித்திட்டமே வடக்கு-கிழக்குப் பிரிப்பு என்னும் விடயத்துக்குள் உள்ளடங்கியுள்ளது என்பது வெள்ளிடைமலை.

மேலும் தமிழரசுக்கட்சி ஸ்தாபிக்கப்பட்ட ஆரம்பகாலத்திலே, கிழக்கிலங்கையில் அன்று இளைஞரா கவும், எழுத்தாளராகவும், சிறந்த பேச்சாளராகவுமிருந்த சொல்லின் செல்வர் செ.இராசதுரை அவர்கள் இக்கட்சியை அடி, உதைகள் உட்படப் பல இன்னல்கள், இடையூறுகளை எதிர்கொண்டு அப்பிரதேசத்தில் கட்டி வளர்த்தார். அத்தோடு அந்நேரத்தில் இஸ்லாமிய அன்பர்களில் பெரும்பாலானோரும் தமிழரசுக்கட்சியின் மீது ஈடுபாடுகொண்டு அதன் ஆதரவாளர்களாகவும், அனுதாபிகளாகவும் விளங்கினர். இதற்குத் தமிழரசுக்கட்சியின் கொள்கைப் பிரச்சார வாரப்பத்திரிகையான சுதந்திரனில் அக்காலப்பகுதியில் இஸ்லாமியர்களும் குறிப்பிடத்தக்களவில் ஆக்கங்களை ஆக்கி வந்தமையையும் சான்றாகக் குறிப்பிடலாம். காலப்போக்கில் தமிழரசுக்கட்சியின் வடக்கிலுள்ள தலைமை பிரதேச உணர்வுகளையும், இஸ்லாமியர் தொடர்பில் சமநிலையற்ற அணுகுமுறை களையும் படிப்படியாகக் கையாளத் தொடங்கியது. இதனால் ஆரம்பத்தில் இஸ்லாமியர்களுக்குள் தமிழரசுக்கட்சியின் மீது ஈடுபாடுகொண்டிருந்தவர்கள் படிப் படியாகத் தமது அடையாளங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய முஸ்லீம் லீக் போன்ற அரசியல் கட்சிகளை ஆதரிக்கத் தொடங்கினார்கள். இந்நிலையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தலை மைப் பதவியை மாற்றி மாற்றி வழங்கும் இயல்பைக் கொண்டதாக விளங்கியமையால், கிழக்குத் தலை மையும் அப்பதவியை நாடிநின்றது. எனினும் வடக்குத் தலைமையானது அப்பதவியைக் கிழக்குக்கு வழங்குவதில் பின்னின்றது. நீண்டகாலக்கட்சி அனுபவ மும், தமிழ் மணமும் கமழ்ந்து நின்றதோடு, தி.மு.க பாணிப் பேச்சாளராகவும் விளங்கிய செ.இராசதுரை அவர்கள் இப்பதவியை எதிர்நோக்கியிருந்ததோடு வடக்கிலும், கிழக்கிலும் இருந்த தமிழரசுக்கட்சியின் கொள்கைவாதிகளும் நேர்மையாளர்களும் அவருக்கு அப்பதவியை வழங்குவதில் ஆர்வமுள்ளவர்களாக விளங்கினர். எனினும் வடக்கின் தமிழரசுத்தலைமை கிழக்கைத் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வந்தமை அக்கட்சி சார்ந்த முக்கியஸ்தரும் வடக்கு-கிழக்கு தமிழ்பேசும் மக்களினது பேரபிமானத்துக்குப் பாத்திரமானவருமான செ.இராசதுரை அவர்களையும் அப்;பிரதேசத்தைச்சேர்ந்த தமிழ்-இஸ்லாமிய மக்களையும் அதிருப்தி கொள்ளவைத்தது. இதன் விளைவாகத் தமிழரசுக்கட்சியின் மீது ஆரம்ப காலத்தில் அபிமானம் வைத்திருந்த இஸ்லாமியர் தமது சமூகத்தின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போன்ற கட்சிகளிலும் அபிமானங்கொள்ள ஆரம்பித்தார்கள். அத்தோடு கிழக்கிலங்கையின் செ.இராசதுரை தவிர்ந்த வேறுபல பிரமுகர்களும் ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க ஆகிய கட்சிகளில் பகிரங்கமாக இணைந்து வேலைசெய்யவும், இரகசியமாக இணைந்து வேலை செய்யவும் ஆரம்பித்தார்கள். வடக்கின் தமிழரசுக்தலைமையின் பிரதேச ரீதி யான இப்பாகுபாட்டினால் கிழக்கில் தமிழரசுக்கட்சியின் பிரமுகர்கள் அடைந்த அதிருப்தியையும், மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பையும் ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியன மிகவும் மகிழ்ச்சியுடன் நோக்கியதோடு அவர்களுக்கிடையில் உருவான இக்கசப்புணர்வை வடக்கு-கிழக்குப் பிரிவுக்கு ஒரு சாதகமான காரணியாக இறுகப்பற்றிப் பிடித்துக்கொண்டுமுள்ளார்கள்.

150205162505_hon_za_nazeer_ahamed_sri_lanka_slmc_eastern_provincial_council_640x360_bbc

இதன் பின்னணியில் 1977 இடைத்தேர்தலின்போது செ.இராசதுரை, கவிஞர்.காசி ஆனந்தன் ஆகியோர் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் வீட்டுச்சின்னத்தின் கீழும், தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தின் கீழும் மோதவிடப்பட்டார்கள். இராசதுரை அவர்களைக் களையெடுக்கும் நோக்கில் அமிர்தலிங்கம் அவர் களினால் மேற்கொள்ளப்பட்ட இச்சூழ்ச்சித்திட்டம் எதிர்பாராத விதமாக இராசதுரை அவர்கள் வென்றும், காசி ஆனந்தன் அவர்கள் தோற்றும் தோல்வியைத் தழுவிக்கொண்டதோடு, தேர்தலில் வெற்றிபெற்ற இராசதுரை அவர்கள் ஐ.தே.க இல் இணைந்து இந்து மத விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சுப்பதவியையும் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐ.தே.க அரசாங்கம் ஐ.தே.க பிரமுகரும் அமைச்சரும் என்னும் நிலையில் நாடாளுமன்றத்தில் இராசதுரை ஆற்றிய கன்னி உரையின்போது பெரிதாக ஆரவாரப்படுத்தியதோடு அவ்வரசாங்கம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றுக்குள் பெரிதாக கூச்சலிட்டுத் தமது அசாதாரண மகிழ்ச்சியை அம்பலப்படுத்தியுமுள்ளார்கள்.

வடக்கு-கிழக்கைப் பிரித்துத் தமிழ்பேசும் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதற்கு ஏற்கனவே திட்டமிட்டு உருப்படியான வழியெதுவும் தெரி யாதநிலையில் சிந்தித்துக்கொண்டிருந்த இலங்கையின் ஆளுவோருக்கு இராசதுரை தொடர்பிலான இந்நிலைப்பாடு வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல பெரும்வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. இப்பின்னணியில் தான் கொழும்பின் ஆள்வோர் தொடர்ந்தும் கிழக்குத் தமிழ்பேசும் மக்களை வடக்கின் தமிழ்த்தலைமை, கீழ் மாகாணத் தமிழர்கள் எனவும், இஸ்லாமியர்கள் எனவும் ஓரங்கட்டக்கூடியதான தந்திரோபாயமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. கொழும்பின் ஆட்சியாளர்கள் வடக்கின் தமிழ்த்தலைவர்களின் பிரதேசம் சார்ந்த புறக்கணிப்புக்களினாலும் தமிழர்-இஸ்லாமியர் என்னும் முரண்பாடு தொடர்புகளினாலான பாகுபாடுகளி னாலும் அதிருப்தியடைந்த கிழக்கின் தமிழ்பேசும் மக்களான தமிழ்-இஸ்லாமிய மக்களையும் அவர்களின் பிரதேசஞ்சார்ந்த பிரதிநிதிகளையும் தமது வலைக்குள் அகப்படுத்தும் நடவடிக்கைகளை மிகவும் துரிதகதியில் மேற்கொண்டார்கள். இதன் பெறுபேறு கள் தான் பிரதேசஞ்சார்ந்த அரசியல் நியமனங்கள், சமூக நலன்சார்ந்த நியமனங்கள் என்பவற்றில் கிழக்குக்கு முன்னுரிமை அளித்துத் தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதிகள் தமிழரையும், இஸ்லாமியர்களையும் வடக்கு, கிழக்கு என்னும் பிரதேச உணர்வின்பாற்பட்டுப் பிரித்துவைத்து அதில் வெற்றியையுங் கண்டுள்ளார்கள்.

அத்தோடு விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகாலத்திலிருந்தே தொடர்ச்சியாக அவ்வமைப்பில் பல ஆண்டுகள் அங்கம் வகித்து அயராதுழைத்த கருணா அவர்கள் புலிகள் அமைப்பிலிருந்து விலகிச்சென்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்னும் அமைப்பை உருவாக்குவதற்குப் விடுதலைப்புலிகள் அமைப்பின் நிழல் ஆட்சிக்குள் இடம்பெற்ற பிரதேச ரீதி யான பாதுபாடுதான் காரணமாக இருந்திருக்கவேண்டும்.

யாழ்ப்பாணத்தையும் விடுதலைப்புலிகள் அமைப்பினர் தமது கட்டுப்பாட்டிலிருந்து கைநழுவிவிட்டு பின் பல ஆண்டுகளாகக் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது அந்நிழல் நிர்வாக ஆட்சி அலகுகளுக்கு பொறுப்பாளர் நியமனங்கள் வழங்கப்பட்டபோது பிரதேச ரீதியான பாதுபாடும் ஏனைய விடயங்களிலும் இப்பாகுபாடும் இழைக்கப்பட்டதனால் தான் பிரதேச ரீதி யான இப்பாகுபாடு இழைக்கப்படுவதனை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் தான் கருணாவின் வெளியேற்றமும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டமையும் இடம்பெற்றதெனக்கருதுவதற்கு இட மிருக்கின்றது.

இப்பின்னணியில் தான் ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்படுதவதற்குக் கருணா அவர்கள் மிகவும் பக்கபலமாக இருந்துமுள்ளார். தொடர்ந்து கிழக்கில் இடம்பெற்ற பிரதேச சபைத் தேர்தலில் கருணா அவர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த திருமதி.சிவகீர்த்தா பிரபாகரன் ஆகியோரும், அவர்களையொத்தவர்களும் மாகாண ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு துணைபோனதோடு, வடகிழக்கைப் பிரித்து ஆட்சிசெய்யும் சூழ்ச்சிக்கும் துணைபோயுள்ளார்கள்.

எனவே இவ்வாறான நிகழ்வுகள் வடக்குக் கிழக்கைப் பிரித்துவைத்து ஆளவேண்டுமென்னும் இலங்கையை ஆள்வோரின் பசிக்கு அவர்கள் அதிகளவு கஷ்டப்படாமலே பெற்ற உணவுகளாகும். தொடர்ந்தும் இந்நிலை நீடித்துவருவதை அவர்கள் மிகவும் சாதுரியமாக மெருகூட்டி வலுப்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரித்துவைத்து அப்பிரிவினையில் சவாரி விடுவதையே தமது தாரக மந்திரமாகக் கொண்டுள்ளார்கள்.

இவ்வாறாக வடக்கு-கிழக்கு மாகாணங்களைப் பிரித்துத் தமிழ்பேசும் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதற்கான சதித்திட்டத்தை முறியடித்து அத்திட்டத்தினால் தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வு தொடர்பில் உருவாகவுள்ள ஆபத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமாயின் நம்மவர்கள் தமக்குள் ஏற்படும் அரசி யல் முரண்பாடுகளையோ அல்லது தனி நபர் முரண்பாடுகளையோ கொழும்பு ஆளுவோருடன் இணைந்து பலப்பரீட்சை செய்துகொள்ளும் சாபக்கேட்டை உடன டியாக அகற்றவேண்டும். தமக்குள் எக்காரணிகளை முன்னிட்டாவது, தனி நபர் முரண்பாடுகளோ அல்லது பிரதே சஞ் சார்ந்த முரண்பாடுகளோ அல்லது சமூகஞ்சார்ந்த முரண்பாடுகளோ அல்லது நிதி விவகாரங்களின் பாற்பட்ட முரண்பாடுகளோ தோன்றும்போது மறந்துங்கூட ஆளுவோருக்குத் துணைபோய் அவர்களுடைய பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அடிபணிந்துவிடக்கூடாது.

தமக்குள் எப்பின்னணியைக்கொண்ட பிரச்சினைகளுக்காவது முகங் கொடுக்கும்போது தமிழர் என்ற உணர்வையும், வடக்கு-கிழக்கு இணைந்த ஒரே தாயகம் என்னும் கோட்பாட்டையும் ஒரு சிறிதளவே னும் தளரவிடாமல் தமக்கிடையிலே பலப்பரீட்சை செய்துகொள்ளவேண்டுமே தவிர எதிரியுடன் இணைந்து பலப்பரீட்சை செய்துகொள்வது முழுத் தமிழினத்துக்குமே ஓர் ஆபத்தான விடயமாகும்.

அதுமட்டுல்லாமல் இன்று ஆன்மீகத் தலைவர்களாகவும், அரசி யல் தலைவர்களாகவும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் தமிழர்கள் பலருங்கூட மேற்கூறப்பட்ட துறைகள்சார்ந்த தமி ழர் கலை, கலாச்சார விழுமியங்களுக்கு விரோதமாகத் துணைபோகின்றார்களே யொழிய அவர்களுடைய தமிழர் கலை கலாச்சாரத்தை நாசப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளைத்தடுத்து நிறுத்தி தமி ழர் கலை, கலாச்சார விழிப்புணர்வின் அவசியத்தை நிலைநிறுத்துவதற்குப் பின்னடிக்கின்றார்கள். எனவே அவர்கள் உடனடியாக இவற்றில் தலையிட்டுத் தடுத்து நிறுத்தித் தமி ழர் கலை, கலாச்சாரம் தொடர்பிலான விழிப்புணர்வை நிலைநிறுத்தவேண்டும்.

-நெற்றிப் பொறியன்-

 

SHARE