வடக்கு கிழக்கை இணையவிடாமல் புதிய முஸ்லிம் மக்களின் அமைப்பை உருவாக்கும்  மஹிந்த ராஜபக்ஸ!

241

mahinda-rajapaksa1

வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு தாம் ஒருபோதும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும் புதிய முஸ்லிம் மக்களின் அமைப்பொன்றை உருவாக்கவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஸவின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மேலும், கூட்டு எதிர்க்கட்சி தற்போது உருவாக்க இருக்கும் புதிய படையணிக்கு ஆதரவினை வழங்கும் வகையில் முஸ்லிம் மக்களின் அமைப்பொன்றை விரைவில் உருவாக்க உள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ இதன் போது கூறியுள்ளார்.

இத்தோடு வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு தாம் ஒருபோதும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும், அதற்கு தொடர்ந்தும் எதிர்ப்பினை தெரிவிப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும் மஹிந்த ராஜபக்ஸ குறித்த சந்திப்பினை தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE