வடக்கு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் ஒன்றியமும், ஐந்து மாவட்ட தனியார் போக்குவரத்து பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கடந்த வியாழன் 12-08-2016 அன்று மாலை 3.30 மணியளவில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களைச் சந்தித்து மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
குறித்த விசேட ஒன்றுகூடலில் வடக்கில் அடுத்த மாதம் அமுலாக்கவுள்ள இணைந்த நேர அட்டவணை தொடர்பாகவும், போக்குவரத்து நியதிச்சட்டம் தொடர்பானதுமான சில முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதோடு, போக்குவரத்து அதிகாரசபை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.