வடக்கு பொருத்து வீட்டுத்திட்டம்:த.தே.கூட்டமைப்பின் கோரிக்கைக்கமைய நிறுத்தம்

263

வடக்கில் நிர்மாணிக்கப்படவிருந்த 65,000 பொருத்து வீட்டுத் திட்டமானது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு விடுத்திருந்த கோரிக்கைக்கு அமையவே நிறுத்தப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து வெளிட்ட இராஜாங்க அமைச்சர் இந்த வீட்டுத்திட்டம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

மேலும் மாதிரி வீடு ஒன்றை நிர்மாணித்து அதன் மூலம் வடக்கிற்கு இந்த பொருத்து வீட்டுத்திட்டம் பொருத்தமானதா? என அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி தெரிவித்ததாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை வீட்டுத்திட்டம் தொடர்பில் எந்தவொரு நிறுவனத்துடனும் இதுவரை ஒப்பந்தங்கள் செய்யப்படவில்லை என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ எம்.ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.

625.117.560.350.160.300.053.800.210.160.90

SHARE