வடக்கு மக்களுக்கு கருணை,இரக்கம், பிரிவு என்பதே தேவை: ஆளுநர் ரெஜினோல்ட் குரே

159

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறுகையில் வடக்கு மக்களுக்கு கருணை, இரக்கம், பிரிவு என்பதே தேவை என கூறியுள்ளர். நேற்று முன்தினம் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டச் செயலக முன்றலில் பாதிக்கப்பட்டவர்களின் குறிப்பிட்ட தொகையினருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் மேலும் தெரிவித்தது தமிழ் மக்களுடன் நான் இங்கே வாழ்ந்து வருகின்றேன். அவர்களின் கலாச்சாரம் மனித நேயம், மனிதத் தன்மை அவர்களின் துன்பங்கள் அனைத்தையும் நன்கு புரிந்துள்ளேன் எனக் கூறினார். மற்றும் போராலும், சுனாமியாலும் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு தென்னிலங்கையிலிருந்து வந்து பெளத்த துறவிகள் உதவி செய்கின்றமை மிகுந்த மனமகிழ்ச்சியை தருகின்றது என கூறினார்.

இந்நிலையில் போதிராஜா பதனமே தொண்டு நிருவனத்தின் தலைவர் ஒமலே சோபிததேரர் அவர்களால் தாய்லாந்து, சிங்கபூர் , மலேசிய நாட்டவர்களின் பங்களிப்புடன் முல்லைத்தீவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மூன்று சில்லு வண்டிகள் 1,000 மாமரக் கன்றுகள், 100 பசுக் கன்றுகள் மற்றும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.மற்றும் இந்த நிகழ்ச்சி ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் துஸ்யந்த இராஜகுருவின் தலைமையில் நடைப்பெற்றது.முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாண அளூநரின் உதவிச் செயலர் ஏ.எக்ஸ். செல்வநாயகம் உட்படப் பலர் கலந்துகொண்டனார்.

SHARE