வடக்கு சிவிலியன்களுக்கு சொந்தமான தங்கத்திற்கு என்னவாயிற்று என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கிகளிலிருந்து தங்கம் மீட்கப்பட்டதாகவும் அவற்றை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடந்த அரசாங்கம் அறிவித்திருந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒரு தொகுதி நகைகளை மட்டுமே மக்களுக்கு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு முதல் தேர்தல் வரையில் எதற்காக தங்கத்தை வைத்திருந்தார் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நகைகளை மஹிந்த தனது மனைவிக்கு அணிவித்து அழகுபார்த்தாரா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வழங்கப்பட்ட தங்க ஆபரணங்கள் பத்தில் ஒரு பகுதி மட்டுமே எனவும் எஞ்சியவற்றுக்கு என்ன நேர்ந்தது என விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
மிகவும் பாதுகாப்பான முறையில் இந்த தங்க ஆபரணங்கள் பொதியிடப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.